அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, டெட் முடித்தோரை சமீபத்தில் தற்காலிக ஆசிரியர்களாக நியமித்தனர்.
பல பள்ளிகளில் புதிய சேர்க்கை நடத்த முடியாத அளவுக்கு, மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வந்தது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, டெட் முடித்தோரை சமீபத்தில் தற்காலிக ஆசிரியர்களாக நியமித்தனர்.
இதேபோல், மேல்நிலை வகுப்புகளுக்கும், தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு, கற்பித்தல் பணி தொடர்வதால், தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம் ஏற்படும் என, தலைமையாசிரியர்கள் ஆதங்கப்பட்டனர். ஏனெனில், அவர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்குவதால், பள்ளி நேரத்தை தாண்டி, சிறப்பு வகுப்புகள் கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..மொபைல் போன் வெடித்து பலியான பெண்.. இந்தியாவில் இதுதான் முதல் முறை - அதிர்ச்சி சம்பவம்!
இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து உள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஆசிரியர்கள் சங்கத்தை உள்ளடக்கிய ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ‘நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்ததற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காரணம். நீங்கள் தனி தீவு கிடையாது, நானும் உங்களில் ஒருவன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்தேன்.
மேலும் செய்திகளுக்கு..பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்.. உணர்ச்சிவசப்பட்டு சோகத்தில் பேசிய சார்லஸ்.. என்ன பேசினார் ?
அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்டார்கள். அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கொம்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். மற்ற மாநிலங்களை விட அனைத்து துறைகளிலும் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். துறை அமைச்சர்களிடம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள், நிச்சயம் தன கவனத்துக்கு வரும்.
தற்காலிக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் 60 வயது வரை பணியை தொடரலாம். அக்டோபர் 15 முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும். அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..“அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு”.. அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான் - பதவி தப்புமா ?