மக்கள் நீதி மய்ய மகேந்திரனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு... திமுக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Aug 7, 2021, 4:02 PM IST
Highlights

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு பதவியை திமுக தலைமை அறிவித்துள்ளது. 

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு பதவியை திமுக தலைமை அறிவித்துள்ளது. 

மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் பொறுப்பு குறித்து பேசிய அவர், ‘’திமுக தலைவர் கொடுக்கும் பொறுப்பை ஏற்று  செயல்படுத்துவேன். திமுகவிற்கு இன்னும் பெருமளவு ஆதரவு அளிக்கும் வகையில் வேலை செய்வேன். அரசு செயல்பாடுகள் மக்களிடம் சேர்கிறதா என்றும், ஆதரவு  திரட்டுவதும்தான் என் வேலை.

மக்கள் நீதி மையத்தில் இருந்தது போன்ற பொறுப்பு வேண்டாம். பொறுப்பு முக்கியம் இல்லை, தலைவர் பெருந்தன்மையாக பொறுப்பு கொடுதாலும் வேலை செய்வேன், இல்லாவிட்டாலும் வேலை செய்வேன். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படலாம் , ஆனால், எதிர்காலத்தில் அப்படி இருக்காது; கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையயாக மாற்றுவது நிச்சயம், அதுவே என் நோக்கம்’’என்று கூறினார்.

ஆனாலும் மகேந்திரன் 11 ஆயிரத்தும் மேற்பட்டோரை திமுகவுக்கு அழைத்து வந்துள்ளதால் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் எனக் கொங்கு மண்டலத்தில் பேச்சு எழுந்தது. மகேந்திரனுக்கு வரும் உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி மேயர் சீட் சீட் கொடுக்கப்படலாம். கட்சிப்பதவியும் அவருக்கு வந்து சேரும் எனக் கூறி வந்தனர். 

இந்நிலையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
 

click me!