நாளை ஸ்டாலின் தலைமையில் மா.செ கூட்டம்: தட்டி தூக்கும் திமுக.. டரியல் ஆகும் அதிமுக.

By Ezhilarasan BabuFirst Published Aug 7, 2021, 3:15 PM IST
Highlights

அதேநேரத்தில், சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலிலும் பெருவாரியாக இடங்களையும் கைப்பற்ற   வேண்டுமென அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்க  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுகவினர் தயாராகிவரும் நிலையில், இந்த அறிவிப்பு அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.  அதிமுக ஆட்சியின்போது கடந்த 2018 ஆம் ஆண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் நிர்வாகிகளும் பதிவியேற்றுக்கொண்டனர்.

அப்போது தமிழக அரசால் புதிதாக மாவட்டங்களில் பிரிக்கப்பட்டதால், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி  ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி வரையறை செய்யப்படாத காரணத்தினால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மீதமுள்ள 9 மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக அதிமுக-திமுக ஆகிய இரு கட்சிகளும் இதில் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன. சட்டமன்றத்தில் தோல்வியடைந்து எதிர்க்கட்சியாகியுள்ள அதிமுக உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றினால் மட்டுமே அடிமட்டத்தில் கட்சியை வலுவாக வைத்துக்கொள்ள முடியும் என நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதில் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் அந்த கூட்டம் தடைபட்டுள்ளது. 

அதேநேரத்தில், சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலிலும் பெருவாரியாக இடங்களையும் கைப்பற்ற   வேண்டுமென அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் திமுக மா.செக்களுடன் தங்களுக்கு உள்ள வெற்றி வாய்ப்புகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய வியூகங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். 

கடந்த வாரமே இது தொடர்பாக ஆலோசனை நடத்த அதிமுக திட்டமிட்டு அது தடைபட்டுள்ளது. இந்நிலையில்அதிரடியாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடத்த அழைப்பு விடுத்திருப்பது. தேர்தல்களத்தை வெப்பமடையச் செய்துள்ளது. திமுகவின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைப் பொறுத்தவரையில் அக்காட்சி மிகவும் பலவீனமாகவே உணரப்படுகிறது. ஓபிஎஸ்-இபிஎஸ் என இரட்டை தலைமையில் கீழ் செயல்பட்டு வருவதால் எதையும் தீர்க்கமாக முடிவெடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதே நேரத்தில் மறுபுறம் கட்சியை கைப்பற்றும் முனைப்பில் சசிகலா செயல்பட்டு வருவது மேலும் அதன் செயல்பாடுகளை பலவீனப்படுத்தி உள்ளது. இது திமுகவுக்கு முழுக்க முழுக்க சாதகமான சூழ்நிலையே என்பதால், இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் திமுக குறியாக உள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!