திமுகவை கண்டித்து 17 ஆம் தேதி ஆர்பாட்டம்.. ஸ்டாலினை வம்பிழுக்கும் வாசன்.. பாஜகவுக்கு ஆதரவாக துள்ளி குதிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Aug 7, 2021, 2:24 PM IST
Highlights

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை எனவும், வரும் 17 ம் தேதி தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி வள்ளுவர் கோட்டத்தில் சென்னை மாவட்ட தமாகா சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தமாகா சார்பில்  வரும் 17 ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும். தஞ்சையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட பாஜகவினரை கைது செய்தது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது எனவும் ஜி‌கே.வாசன் அறிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாச்சன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர். நாடு முழுவதும் இன்று கைத்தறி தினம் கொண்டாடப்படும் நிலையில், கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், 

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை எனவும், வரும் 17 ம் தேதி தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி வள்ளுவர் கோட்டத்தில் சென்னை மாவட்ட தமாகா சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், மத்திய மாநில அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு தீவிர பயிற்சி அளித்து மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற வழி வகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

உள்ளாட்சி தேர்தல் வரும் பொழுது  கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்த அவர், நாடாளுமன்ற கூட்டத் தொடரை  முடக்கும் உறுப்பினர்கள் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைப்பதாகவே தான் கருதுவதாக கூறினார். மேலும் மேகதாது அணை விவகாரத்தில்  கர்நாடகா அரசு உச்சநீதிமன்றம் கூறியுள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அவர். அண்மையில் தஞ்சையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்தது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது என்று கூறினார்.

click me!