வெளிநாடுகளை எல்லாம் தூக்கி சாப்பிடப்போகுது சென்னை.. இது தரமான சம்பவம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 7, 2021, 2:01 PM IST
Highlights

குறிப்பாக, சென்னை மாநகரில் உள்ள சுவரொட்டிகள் முழுவதும் அகற்றப்பட்டு விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருவதோடு, பூங்காக்கள், ஏரிகள் புணரமைக்கப்பட்டும் வருகிறது.

பசுமை மாநகராட்சி திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வரை 24720 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில், சென்னை மாநகரை தூய்மையாக்கவும், அழகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகரில் உள்ள சுவரொட்டிகள் முழுவதும் அகற்றப்பட்டு விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருவதோடு, பூங்காக்கள்,ஏரிகள், புணரமைக்கப்பட்டும் வருகிறது. 

இந்த நிலையில், சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகிதியில் நேற்று வரை 24720 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பாக நேற்று மட்டும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 479 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த வகையில் வடசென்னை பகுதியில் 192 மரக்கன்றுகளும், மத்திய சென்னையில் 109 மரக்கன்றுகள் மற்றும் தென் சென்னையில் 178 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், காற்று மாசு, ஒலி மாசு குறைவதோடு, இரண்டரை மடங்கு, கூடுதல் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்றும், சுற்றுவட்டார பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி விரைவில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்படும் என்றும், பசுமைச் சென்னையாக மாற்றுவதே இலக்கு எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
 

click me!