தாமதத்திற்கு மாற்று திறனாளிகளிடம் மன்னிப்பு கேட்ட உதய்.. மு.க நினைவு தினத்தில் நெகிழ வைத்த சம்பவம்..

By Ezhilarasan BabuFirst Published Aug 7, 2021, 1:15 PM IST
Highlights

நலத்திட்ட உதவிகளை வழங்க காலதாமதமாக வந்ததற்கு  தாமாகவே முன்வந்து மாற்று திறனாளிகளிடம் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

நலத்திட்ட உதவிகளை வழங்க காலதாமதமாக வந்ததற்கு  தாமாகவே முன்வந்து மாற்று திறனாளிகளிடம் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற அலுவலகத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நலத்திட்ட உதவி நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் நடைபெற இருந்த நிலையில், கலைஞர் நினைவு தினம் என்பதால் பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்ததால் கால தாமதம் ஆகி இருப்பதை சுட்டிக்காட்டி தாமாகவே உதயநிதி ஸ்டாலின் மாற்று திறனாளிகளிடம் மன்னிப்பு கேட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கைக்கால், காது கேளாதோருக்கான காதொலி கருவி,  மூன்று சக்கர வண்டி, தையல் இயந்திரம்  உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்; மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய அங்கீகாரத்தை கலைஞர் அவர்கள் செய்திருக்கிறார்,  என்றும் தற்போது உள்ள முதல்வரும் மாற்றுத்திறனாளிளுக்கான இலவச பேருந்து, சிறப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார். தாமதத்திற்கு வருந்தி சட்டமன்ற உறுப்பினர் உதய் மன்னிப்புகோரியது. அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. இவ்வளவு தன்னடக்கமா என பலரும் அவரை பாராட்டினார்.

 

click me!