மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்... பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... இரு தினங்களில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் கெடு!

By Asianet TamilFirst Published Nov 9, 2019, 9:47 PM IST
Highlights

சட்டப்பேரவையில் 145 இடங்களைக் கொண்ட கட்சியே ஆட்சி அமைக்கும் முடியும் என்ற நிலையில், ஆளுநர் பாஜகவை அழைப்புவிடுத்துள்ளார். மேலும், சட்டப்பேரவையில் நவம்பர் 11க்குள் பெரும்பான்மையை நிரூபிக்குவும் ஆளுநர் உத்தரவிட்டார். ஆளுநரின் இந்த அழைப்பை ஏற்று பாஜக புதிய அரசை அமைக்க உள்ளது. ஆளுநரின் இந்த அழைப்பால் மகாராஷ்டிராவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 288 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. இதேபோல தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிராஸ் கூட்டணி 98 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜக - சிவசேனா கூட்டணி 161 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுழற்சி முறையில் முதல்வர் பதவி, 50 சதவீத அமைச்சர் இடங்கள் என சிவசேனா விதித்த நிபந்தனையால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிபந்தனைகளை பாஜக ஏற்காததால், தேர்தல் முடிவு வெளியாகி 2 வாரங்களைக் கடந்தவிட்டபோதும் புதிய அரசு அமையவில்லை.
இந்நிலையில் முந்தைய அரசின் பதிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வந்ததால், நேற்றைய தினம் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிடம் வழங்கினார். மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.  இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைக்க வருமாறு பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் பகத்சிங் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

click me!