அமித்ஷாவை வச்சு செய்யும் உத்தவ்தாக்ரே..!! மகாராஷ்டிராவில் அகதிகள் முகாம் அமைக்க அனுமதிக்க முடியாது..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 24, 2019, 6:00 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் அகதிகள் தடுப்பு மையங்களை அமைக்க முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் எடுத்த முடிவை எதிர்த்து முகாம் அமைப்பதை  நிறுத்துவதாக உத்தவ் தாக்கரே அதிரடியாக தெரிவித்துள்ளார் 

தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறையில் குடியுரிமை இல்லாதவர்களை தடுத்துவைக்க  அமைக்கப்படும் அகதிகள் தடுப்பு முகாம்களை மகாராஷ்டிராவில்  அமைக்க ஒரு நாளும் அனுமதிக்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார் .  வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவிய இஸ்லாமியர்களை வெளியேற்றும்  நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது .  இதனால் சட்ட விரோத குடியேற்றத்தில் ஈடுபட்டவர்களை தடுப்பு முகாம்களில் அடைக்க  திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு . 

இதனால்  ஒவ்வொரு மாநிலத்திலும் அகதிகள் தடுப்பு முகாம்களை அமைக்கும்  பணிகள் வேகமாக நடந்துவருகிறது.  இந்நிலையில் அசாமில் அகதிகள் தடுப்பு முகாம்களை அமைக்கும் தொடங்கி  பணிகள் நடந்து வருகிறது .  மகாராஷ்டிராவில் அகதிகள் தடுப்பு மையங்களை அமைக்க முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் எடுத்த முடிவை எதிர்த்து முகாம் அமைப்பதை  நிறுத்துவதாக உத்தவ் தாக்கரே அதிரடியாக தெரிவித்துள்ளார் .  இந்தியாவிலேயே நவீன் மும்பையில் முதல் அகதிகள் தடுப்பு முகாம் அமைய  இருந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார் முதல்வர்.   இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறையின் மூலம் இஸ்லாமிய மக்கள் அகதிகளாக்கப்பட உள்ளனர்  என்ற  எண்ணம் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது .

இந்நிலையில் இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் உத்தவ்தாக்ரேவை  சந்தித்து பேசியதை அடுத்து ,  இந்தச் சட்டம் குறித்து யாரும் அஞ்சத் தேவையில்லை தேசிய குடியுரிமை சட்டம் சார்ந்த நடைமுறைகளை மகாராஷ்டிர மாநிலம் அனுமதிக்காது என்று தாக்கரே தெரிவித்துள்ளார் .  இதுவரையில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள்  தேசிய  குடிமக்கள் பதிவு சட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கேரளா ,  மேற்கு வங்கம் ,  உள்ளிட்ட மாநிலங்கள் அதை முழுவதுமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன.  இந்நிலையில் மகாராஷ்டிராவில் அகதிகள்  தடுப்பு முகாமுக்கு அனுமதி இல்லை என அரசு தெரிவிக்கப் பட்டுள்ளது ஆனால்  ஜனவரி 22ஆம் தேதி உச்ச நீதி மன்றத்தில்  வரும் தேசிய குடியுரிமை பதிவு சட்ட வழக்கிற்குப் பின்னரே  இதில் மகாராஷ்டிரா அரசு நிலையான முடிவை அறிவிக்கும் என தெரிகிறது . 
 

click me!