பாஜகவையே கழகமாக்கிய சர்ச்சை நடிகை..!! சொந்த கட்சிகாரர்களே வச்சு செய்யும் விமர்சனம்..!!

Published : Dec 24, 2019, 05:25 PM IST
பாஜகவையே கழகமாக்கிய சர்ச்சை நடிகை..!!  சொந்த கட்சிகாரர்களே வச்சு செய்யும் விமர்சனம்..!!

சுருக்கம்

ரச்சாரத்தின்போது பாரதிய ஜனதா கட்சி என்பதற்கு பாரதிய ஜனதா கழகம் என முழங்கினார் , பின்னர்  பக்கத்தில் இருந்தவர்கள்  தவறை சுட்டிக்காட்ட சுதாரித்துக்கொண்ட அவர் பாஜக  கட்சி என்றார். 

தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா கட்சி என்பதற்கு பாரதிய ஜனதா கழகம் என்று நடிகை காயத்ரி ரகுராம் உளறிய சம்பவம் பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கழகம் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம் என்று முழங்கி வரும் நிலையில் பாஜகவையே கழகமாக்கி விட்டாரோ இந்த  காயத்ரி என  எதிர்க்கட்சிகள் முதல் சொந்தக் கட்சியனர் வரை  காயத்ரியை வறுத்தெடுத்து வருகின்றனர் .  சமீபத்தில் இந்து கோவில்கள் குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை பாஜகவின் ஆதரவாளரான  நடிகை காயத்ரி ரகுராம் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தற்போது  அந்த  பிரச்சினை ஒய்ந்துள்ள நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எச். ராஜா தெரிவித்த கருத்துக்கு நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில்  ஒருவருமான  குஷ்பு எச். ராஜா ஒரு பைத்தியக்காரர் என்றும் ,  எந்த விவேகம் உள்ள நபரும் அவரை போல் பேச முடியாது,  தயவுசெய்து பாஜகவில் யாராவது அவரை புகலிடம் கொண்டு செல்ல முடியுமா எனக்கேட்டு பதிவிட்டிருந்தார் . இந்நிலையில்  குஷ்புவின் இந்த கருத்துக்கு நடிகையும்  சர்ச்சைக்கு பெயர்போன நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில்  " கூ"  என பதிவிட்டு  அதை குஷ்புவை டேக் செய்திருந்தார் .  இந்நிலையில் இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது .  அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் பலரும் காயத்ரியை  கண்டித்து வருகின்றனர் .  இந்நிலையில் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு மதுரை வாடிப்பட்டி ஒன்றியத்தில் 2 கவுன்சிலர் சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் அந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகை காயத்ரி ரகுராம் ,  பிரச்சாரத்தின்போது பாரதிய ஜனதா கட்சி என்பதற்கு பாரதிய ஜனதா கழகம் என முழங்கினார் , பின்னர்  பக்கத்தில் இருந்தவர்கள்  தவறை சுட்டிக்காட்ட சுதாரித்துக்கொண்ட அவர் பாஜக  கட்சி என்றார்.  தன்னுடைய சொந்த கட்சியின் பெயரை கூட சொல்ல முடியாத  இவைரையெல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்வது  என பாஜகவினர் காயத்ரி ரகுராம் மீது அதிருப்தியடைந்துள்ளனர் .  தெருவுக்குத் தெரு  கழகத்தை ஒழிக்க வேண்டுமென பாஜகவினர் பேசிவரும்  நிலையில் பாஜகவையே கழகம் எனக்கூறி பாஜகவினரை திக்குமுக்காட வைத்திருக்கிறார் காயத்ரி ரகுராம் . 
 

PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?