குடியுரிமை இல்லாதவர்களை அமித்ஷா என்ன செய்யப் போகிறார் தெரியுமா..?? நீங்களே பாருங்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 24, 2019, 4:37 PM IST
Highlights

 இந்நிலையில் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை  தடுப்புக் காவலில் வைக்க தடுப்புக்காவல் முகாம்களை மத்திய அரசு அசாமில்  அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது 

குடியுரிமை கிடைக்காதவர்களை  தடுத்து வைக்க தடுப்புக்காவல் முகாம்களை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தீவிரமாகி வரும் நிலையில் அசாமில் தடுப்பு முகாம்கள் அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  பாகிஸ்தான் , ஆப்கனிஸ்தான் ,  வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாத  சிறுபான்மையினர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும்  வகையில் இந்திய குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டுள்ளது.   இச்சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப் படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது எனக்கூறி நாடு முழுவதும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை  பின்வாங்க வேண்டும் என போராட்டங்கள் நடந்து வருகிறது .

தமிழகம் கேரளம் கர்நாடகம் மேற்கு வங்கம் உத்தரப் பிரதேசம் வடகிழக்கு மாகாணங்கள் என போராட்டம் காட்டுத்தீயாய் பரவி வருகிறது இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவிற்கு நாடுமுழுவதுத் மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர் .  இதற்கிடையே வங்கதேசத்தில் இருந்து வந்த சுமார் 20 லட்சம் பேர் அஸ்ஸாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது .  இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அசாம் ஒப்பந்தத்தின்படியும் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகஸ்டு மாதம்  வெளியிடப்பட்டது .   இதில் 19 லட்சம் பேர் இணைக்கப்படவில்லை என்றும் அதில் பலர் இந்திய குடிமக்கள்  என்பதும்  தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது .

சட்டவிரோதமாக  அசாமில்  ஊடுருவி உள்ளவர்களை அடையாளம் காணவே தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.   அதாவது தேசிய குடிமக்கள் பதிவேடு விடுபட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க  மேல்முறையீடு செய்யலாம் ,  இந்திய பிரஜை என்பதற்காக பிறப்புச்சான்றிதழ் மற்றும்  பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்களை அதற்கு ஆதாரமாக அளிக்கலாம்,   தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்கள் 120 நாட்களுக்குள் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் முறையிடலாம் ,  அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் அசாம்  உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம் ,  கடைசியாக உச்சநீதிமன்றத்திலும் முறையிடலாம் என்று மத்திய அரசு  வழிகாட்டியுள்ளது .

அதேநேரத்தில் குடியுரிமை பெறாதவர்கள் நிலைமை என்ன என்பதையும் உறுதியாக மத்தியஅரசு தெரிவிக்கவில்லை , குடியுரிமை இல்லாதவர்கள்  நாடு கடத்த படுவார்கள் என பாஜக வட்டாரம் தெரிவித்து வருகிறது.  இந்நிலையில் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை  தடுப்புக் காவலில் வைக்க தடுப்புக்காவல் முகாம்களை மத்திய அரசு அசாமில்  அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது . 

click me!