
தேர்தல் களத்தில் எங்களது முதல் எதிரி திமுக தான் என்றும் குடும்ப அரசியலின் ஊற்றுக்கண் திமுகதான் என்றும் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி, ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் எங்களது முதல் எதிரி தி.மு.க தான் என தெரிவித்தார்.
டி.டி.வி.தினகரனை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்றும் குடும்ப அரசியல் என ஓபிஎஸ் அடிக்கடி கூறுவது சசிகலா குடும்பத்தை மட்டுமல்ல, திமுகவையும் சேர்த்துத் தான் என கூறினார்.
குடும்ப அரசியலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் திமுகவை எதிர்க்கிறோம் என்றும். ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது தி.மு.க.,தான் என்றும் பாண்டியராஜன் தெரிவித்தார்.
திமுகவை விமர்சிப்பதில் மாற்று கருத்து கிடையாது. என்று தெரிவித்த அவர், ஆர்,கே.நகர் தொகுதிக்கான தேர்தல்அறிக்கை நாளை காலை வெளியிடப்படும் என்றும் மிகமிக வித்தியாசமான தேர்தல் அறிக்கையாக அது இருக்கும் என தெரிவித்தார்.
காலக்கெடுவுடன் கூடிய 108 தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். இந்தியாவில் யாரும் இதுவரை அளித்திடாத வாக்குறுதியை நாங்கள் தருவோம் என்றும் பாண்டியராஜன் கூறினார்.
நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் விளக்கமளிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்