ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் முக்கிய கட்சியின் வேட்பாளர்கள் போட்டிடுகின்றனர். ஆர் கே நகரில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆட்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும் அதனை உடனே தடுக்க கோரியும் தேர்தல் ஆணையத்தியம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தண்டையார் பேட்டை 39 வது வார்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு புடவை குடம் தங்க நகை பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
மேலும் வாக்காளர்களின் செல்போன் எண் மற்றும் ரேசன் கார்டுகளை வாங்கிக்கொண்டு பெரம்பூர், திருவிக நகர் பகுதிகளில் வரவழைத்து விநியோகம் செய்யப்படுவதாக திமுகவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.‘
அப்போது வாக்காளர்களின் செல்போன் எண்களை அதிமுக அணியினர் வாங்கியதை கண்டு அவர்கள் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் புகார் அளித்தனர். மேலும் பணப்பட்டுவாடாவை தடுக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பலமணிநேரம் பாதிக்கப்பட்டது.
ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் முக்கிய கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆர் கே நகரில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆட்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும் அதனை உடனே தடுக்க கோரியும் தேர்தல் ஆணையத்தியம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தண்டையார் பேட்டை 39 வது வார்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு புடவை குடம் தங்க நகை பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
மேலும் வாக்காளர்களின் செல்போன் எண் மற்றும் ரேசன் கார்டுகளை வாங்கிக்கொண்டு பெரம்பூர், திருவிக நகர் பகுதிகளில் வரவழைத்து விநியோகம் செய்யப்படுவதாக திமுகவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.‘
அப்போது வாக்காளர்களின் செல்போன் எண்களை அதிமுக அணியினர் வாங்கியதை கண்டு அவர்கள் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் புகார் அளித்தனர். மேலும் பணப்பட்டுவாடாவை தடுக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பலமணிநேரம் பாதிக்கப்பட்டது.