
ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மாநில அரசின் துணையுடன் மத்திய அரசு இரட்டைவேடம் போடுவதாக திமுக செயல் செலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயுவை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கூறி நெடுவாசல் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. ஆனால் பொதுமக்கள் விரும்பினால் மட்டுமே இந்திட்டம் செயல்படத்தப்படும் என விவசாயிகளை டெல்லியில் சந்தித்த பொட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்திருந்தார்.
ஆனால் விவாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தங்கள் நேற்று முன்தினம் கையெழுத்தாயின.இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக செயல் தலைவரும் தமிழக எதிர் கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த விவகாரத்தில் மாநில அரசின் துணையுடன் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது என்று குற்றம்சாட்டினார்.