
அதிமுக அம்மா அணியினர் தொடர்ந்து சசிகலாவை ஆதரித்தால் எடப்பாடி தலைமையிலான ஆட்சி எங்களால் கவிழும் என முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளுருமான மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு இரண்டாக உடைந்த அதிமுக ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியும் என செயல்பட்டு வருகிறது.
இதனிடையே எங்களால் எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழாது என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார்.
இந்நிலையில் ஆவடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் , அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவர்கள் சசிகலா ஆதரவு நிலையை எடுத்து வந்தால் அணிகள் இணைவதில் குழப்பம் ஏற்படும் என தெரிவித்தார்.
இரு அணிகள் இணைவதில் இதே நிலை நீடித்தால், எங்களாலேயே தமிழக அரசு விரைவில் கவிழும் என்று கூறினார். ஆனால் அது நிகழக்கூடாது என்பதுதான் எங்களது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்துவிட்டு, இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம் என்றும் மாஃபா. பாண்டியராஜன் கூறினார்.