ஆகஸ்ட் 31க்குள் உள்ளாட்சி தேர்தல் வேண்டும் - பாண்டியராஜன் வலியுறுத்தல்...

First Published Jul 23, 2017, 5:55 PM IST
Highlights
Mafa Pandiyarajan said that the local elections should be held by August 31 as it is in the court.


நீதிமன்றத்தில் அறிவுறுத்தி உள்ளது போல ஆகஸ்ட் 31ல் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்  நடத்த வேண்டும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி முடிந்தது. இதையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் முறைக்கேடு நடந்ததாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது.

மேலும் ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.

ஆனால் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடியவில்லை எனவும்,  அனைத்து பணிகளும் முடிந்தவுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் அணையம் தெரிவித்தது. 

இதைதொடர்ந்து, இந்த வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக அரசிற்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

மேலும் வரும் 2 ஆம் தேதிக்குள் அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது. 

ஆனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்துவது சிரமம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து வரும் 26 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், நீதிமன்றத்தில் அறிவுறுத்தி உள்ளது போல ஆகஸ்ட் 31ல் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்  நடத்த வேண்டும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

click me!