சொன்னதை செஞ்சுட்டோம்ல !! டுவீட் போட்டு பாஜகவை அலற வைத்த ராகுல் காந்தி!!

Published : Dec 18, 2018, 07:59 AM IST
சொன்னதை செஞ்சுட்டோம்ல !!  டுவீட் போட்டு பாஜகவை அலற  வைத்த ராகுல் காந்தி!!

சுருக்கம்

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட கமல்நாத் , பதவியேற்ற 2 மணி நேரத்தில் அந்த மாநில  விவசாயிகளின் கடன்கனை ரத்து செய்து தனது முதல் கையெழுத்தை போட்டார். இது தங்களது சாதனைகளில் ஒன்று என்றும், நாங்கள் சொன்னதை செய்வோம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத், ராஜஸ்தானில் அசோக் கெலாட், சத்தீஸ்கரில்  பூபேஷ் பாகெல் என காங்கிரஸ் முதலமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர் .இந்த  மூன்று பதவியேற்பு நிகழ்ச்சிகளிலும்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோடு திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்றார்.

ஜெய்ப்பூர் ஆல்பர்ட் அரங்கத்தில் நேற்று  நடைபெற்ற விழாவில், அசோக் கெலாட் ராஜஸ்தான் முதலமைச்சராக  பதவி ஏற்றுக் கொண்டார். நேற்று பிற்பகலில்  போபால் ஜம்பூரி திடலில் நடைபெற்ற விழாவில், மத்திய பிரதேசத்தின் 18ஆவது  முதலமைச்சராக  கமல்நாத். .பதவியேற்றுக் கொண்டார்

இதையடுத்து தேர்தல் வாக்குறுதில் விவசாயக் கடன்களை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்ததை மனதில் கொண்டு முதலமைச்சராக பதவியேற்ற கமல்நாத், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் தனது முதல் கையெழுத்தை போட்டார்.

இந்நிலையில் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துவிட்டதாகவும், அடுத்து விரைவிலேயே அடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு மன்பு கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ‘விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என்று வாக்குறுதி அளித்தது. திமுக அப்போது வென்று கருணாநிதி  முதலமைச்சராக  பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?
என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!