
இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்னர், அதிமுக.,வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மவுசு கூடி விட்டது. டிடிவி தினகரன் அணியில் இருந்து 3 மாநிலங்களவை எம்.பி.க்களும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்து ஆதரவு தெரிவித்து விட்டனர். அப்போது விஜிலா சத்யானந்த் எம்.பி., இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கே நாங்கள் இருப்போம் என்று வேறு கூறிவிட்டுச் சென்றார்.
இப்போது, அந்த இரட்டை இலைக்கு அக்னிப் பரீட்சையாக அமைந்திருக்கிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இந்தத் தேர்தலுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் இருந்து அதிமுக., சார்பில் போட்டியிட கட்சிக்குள்ளேயே போட்டி அதிகரித்து விட்டது.
இப்படி எல்லாம் நடக்குமென்று தெரிந்துதான், இரு தினங்களுக்கு முன்னரே மதுசூதனன் லேசாக முனகினார். தனக்கு முக்கியத்துவம் கிட்டாது போகிறது என்று கூறிப் பார்த்தார். பின்னர், அதிமுக., ஆட்சி மன்றக் குழு கூடி இதனை தீர்மானம் செய்யும் என்று முடிவு எடுத்தார்கள்.
இதனிடையே, ஆர்.கே.நகரில் போட்டியிட நிறைய பேர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். கழக அவைத் தலைவர் என பொறுப்புள்ள மதுசூதனன் மட்டுமல்லாது, பலரும் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்துவருவதால், இன்னொரு களேபரம் அதிமுக.,வில் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.
இதோ, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்தவர்களின் பட்டியல்...
1)து.சம்பத், எம்.கே.பி.நகர், அடிப்படை உறுப்பினர்
2) மதுசூதனன், கழக அவைத்தலைவர்
3) ஆர்.எம்.டி.ரவீந்திர ஜெயின், 1996 ஆம் ஆண்டு வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்.
4) அஞ்சுலட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர், 42 வார்டு கவுன்சிலர்.
5) தமிழ் மகன் ஹுசேன், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர்
6) ஆதிராஜாராம், முன்னாள் தென் சென்னை மாவட்ட செயலாளர்
7) கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர் அவர்களின் சார்பில் அவருடைய உதவியாளர் வாங்கி சென்றார். (கோகுல இந்திரா நேரில் வரவில்லை).
8 ) ஏ.ஏ.எஸ்.முருகன், வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்
9) பா. கார்த்திகேயன், முன்னாள் சேர்மேன் மண்டலம் 4.
10) ஏ.பாலமுருகன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்.
11) ஆர்.மதுரைகுமார், ஆர்.கே.நகர் பகிதி கழக துணை செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்.
12) நூர்ஜகான், முன்னாள் மாமன்ற உறுப்பினர், கடந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதிக்கு நிறுத்தப்பட்டு தோல்வியுற்றவர்.
13) ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர்.
14) சேவல்.ஏ.என்.சுப்பிரமணி, முன்னாள் வடசென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்
15) ஏ.கணேசன், வடசென்னை வடக்கு மாவட்ட மீனவர் அணி மாவட்ட செயலாளர்
16) பி.நாகலிங்கம், வடசென்னை வடக்கு மாவட்ட 39 தெற்கு வட்ட செயலாளர்.
17) ஆர்.தேவராஜ், வடசென்னை வடக்கு மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளார்.
18) கே.முகமது உஸ்மான், முன்னாள் பகுதி கழக துணை செயலாளர் ஆர்.கே.நகர்
19) கோயில் பிள்ளை, மதுசூதனன் ஆதரவாளர்.
- இந்தப் பட்டியல் இன்னும் நீளக்கூடும். புதன்கிழமை நாளை காலை இது குறித்து ஆட்சி மன்றக் குழு கூடி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆட்சி மன்றக் குழுவில் உள்ளவர்களே விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தால்... என்னதான் நடக்குமோ...?