ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியில்லை..? திடீர் நழுவலுக்கு என்ன காரணம்..?

 
Published : Nov 28, 2017, 04:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியில்லை..? திடீர் நழுவலுக்கு என்ன காரணம்..?

சுருக்கம்

Is dinakaran surely compete in rk nagar by election

குடும்பத்தினரின் எதிர்ப்பால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தினகரன் ஆலோசித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்கனவே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேர்தலில், தினகரன் போட்டியிட்டார். ஆனால், ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிடுவதை சசிகலா விரும்பவில்லை எனவும் சசிகலாவின் பேச்சை மீறி தினகரன் தன்னை வேட்பாளராக அறிவித்துக்கொண்டதாக கூறப்பட்டது.

அந்த தேர்தலில் போட்டியிட்ட பின்னர்தான், இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைதானார். தேர்தல் பிரசாரத்தில் முதல்வர், அமைச்சர்கள் பயன்படுத்தப்பட்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியை விட்டு ஒதுக்கிவிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைவதற்கு, அந்த தேர்தலில் தினகரன் போட்டியிட்டதே அடிப்படைக் காரணமாக அமைந்தது.

அதன்பிறகு, கட்சியில் ஆதரவை இழந்து, இரட்டை இலையை இழந்து சசிகலாவும் தினகரனும் தனித்துவிடப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், இரட்டை இலையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை எதிர்த்து தொப்பி சின்னத்தில் நின்று வெல்வேன் என தினகரன் சூளுரைத்து, அதற்கான பணிகளிலும் ஈடுபட்டார். ஆனால், இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டியிடுவதை சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ விரும்பவில்லை.

தன்னை சந்திக்கவந்த உறவினர்களிடம், இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் எதற்காக பாடுபட்டோமோ.. அந்த இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டியிடுவது சரியாக இருக்காது. தினகரன் களத்தில் நிற்பதை மற்ற சிலரும் விரும்பவில்லை. ஏற்கனவே மிடாஸில் இருந்து டாஸ்மாக்கிற்கு செய்யப்படும் மதுபான கொள்முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில், தினகரன் போட்டியிட்டால், நமது உறவினர்களின் மற்ற பல தொழில்களும் முடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல், உள்ளாட்சித் தேர்தலாக இருந்தால்கூட போட்டியிட்டு பலத்தை காட்டலாம். இது இடைத்தேர்தல். இதில் இரட்டை இலையை எதிர்த்து நின்று தோற்றுவிட்டால், நமக்குத்தானே அது பின்னடைவாக இருக்கும் என சசிகலா கூறியுள்ளார்.

சசிகலா மட்டுமல்லாமல், அவரது உறவினர்கள் பலரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுவதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. 

எனவே இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது ஆதரவு நிர்வாகிகளிடம் தினகரன் ஆலோசித்து வருகிறார். ஒருவேளை தினகரன் போட்டியிடவில்லை என்றால், வடசென்னை பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்ற தினகரனின் ஆதரவாளரை வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்தும் தினகரன் ஆலோசித்துவருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சசிகலா மற்றும் உறவினர்களின் பேச்சைக் கேட்டு தினகரன் போட்டியிடாமல் விலகுவாரா? அல்லது போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!