
உள்ளாட்சித் தேர்தலில் தம்மை வேட்பாளராக அறிவிக்க முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்சேவின் நண்பர் கூறியதாக நடிகை மதுசா ராமசிங்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மகிந்த ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட நடிகை மதுசா ராமசிங்கே விரும்பியுள்ளார்.
இதற்காக மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரிடம் நடிகை மதுசா உதவி கேட்டிருக்கிறார், ராஜபக்சேவின் நண்பரோ, நடிகை மதுசா ராமசிங்கேவை படுக்கைக்கு அழைத்து முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் நிர்பந்தப் படுத்தியிருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் “தி சண்டேலீடர் “ நாளிதழுக்கு அளித்த பேட்டியில்; ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்காக நான் பாடுபட்டிருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததால் நாமும் போட்டியிடலாம் என முடிவெடுத்தேன். அதனால் போட்டியிட சீட் கேட்டேன், அப்போது ராஜபக்சேவின் நண்பரோ என்னை நிர்வாணமாக நிற்க வேண்டும் என கூறினார்.
இந்த கொடுமையை மகிந்த ராஜபக்சேவிடமும் தெரிவித்தேன். ஆனால், மகிந்த ராஜபக்சேவோ எதயுமே கண்டுகொள்ளவில்லை, என்னை நிர்வாணமாக நிற்க சொன்ன நபர் மீது ராஜபக்சே எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. வெறும் சாரி என ஒரு வார்த்தை மட்டுமே கூறினார். இவ்வாறு நடிகை மதுசா ராமசிங்கே கூறியுள்ளார்.