
ஓபி.எஸ் அணி மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் ராஜன் செல்லப்பா முன்னிலையில் அம்மா அணியில் இணைந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பன்னீர் செல்வத்திற்கு பலம் சேர்க்க அதிமுக அவைத்தலைவர் மதுசூதன், அமைச்சர் பாண்டிய ராஜன், பொன்னையன்ஆதரவாக இருந்தனர்.
அந்த நேரத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற சசிகலா தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூவத் தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்னர். பெண் சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் அங்கு தொடர்ந்து தங்கி இந்தநிலையில் சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் விடுதியில் இருந்து திடீரென தப்பி ஓடி வந்தார். அவர் மாறுவேடத்தில் தப்பித்து பன்னீர் அணியில் சேர்ந்து ஆதரவு தெரிவித்தார்.
மேலும் தன்னை சசிகலா ஆதரவாளர்கள் விடுதியில் கடத்தி அடைத்து வைத்து இருந்ததாகவும் மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்களை கட்டாயப் படுத்தி அடைத்து வைத்தி ருப்பதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகாரும் அளித்தார்.
இந்நிலையில், கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆனா நிலையில் ஓ.பி.எஸ் அணி ஐக்கியமாகியிருந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் ராஜன் செல்லப்பா முன்னிலையில் அம்மா அணியில் இணைந்துள்ளார்.
கூவத்தூரில் இருந்து தப்பி வந்த நாள் முதல் நேற்று வரை பன்னீருக்கு பவ்யம் காட்டி வந்த எம்.எல்.ஏ. சரவணன் மீண்டும் எடப்பாடி அணியில் இணைந்திருப்பது டிடிவி தினகரன் அடித்து ஆடத் தொடங்கி விட்டார் என்பதையே வெளிக்காட்டுகிறது.