
போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று உசுப்பேற்றிவிட்டு காலாவுக்காக மும்பை சென்றுவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். இவர் பற்றவைத்துவிட்டுச் சென்ற தீ, மாட்டிறைச்சி மீதான தடையால் தணிப்பு குறைந்தாலும், முற்றாக அணைந்து விடவில்ல.
இதன் வீரியத்தை தனி டீம் வைத்தே ரஜினி அவ்வப் போது கண்காணித்துக் கொண்டு தான் உள்ளனர். "அவர் சொன்னால் மட்டுமே ரஜினி அரசியலுக்கு வருவார் - தமிழகத்தை ஸ்கேன் செய்யும் ரஜினியின் கேமெரா" என்ற தலைப்பில் விரிவான செய்திக் கட்டுரையை வெளியிட்டிருந்மோம்.
விஷுவல் கம்யூனிகேஷன் பயிலும் மாணவர்கள் இருவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கருத்துக் கணிப்பில் பணியாற்றிய பெண்கள், போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் மற்றும் இரண்டு டீம் ஹெட்ஸ் என பக்கா க்ரூ ஒன்று தமிழகம் முழுவதும் சுழண்றடித்து வருகிறது.
தமிழக நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி அப்படியே ஜெராக்ஸ் போட்டது போல ஹாட் செய்திகளை ஹாட், ஹாட்டர் ஹாட்டஸ்ட், என்று மூன்று கால நிலைகளிலும் மும்பைக்கு பறந்து சென்று கொண்டிருக்கிறது.
மாட்டிறைச்சியால் மங்கிப் போனதாகக் கூறப்படும் ரஜனி போஃபியா ராகுல்காந்தியை வைத்து மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது. தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறும் ரஜினிகாந்த் காங்கிரஸில் இணையப் போகிறார் என்பதே அந்த ஹம்பக்.
ஒருபுறம் மாட்டிறைச்சி விவகாரத்தில் #திராவிடநாடு என்ற டேக்குகள் டுவிட்டரில் ரெக்கை கட்டிப் பறந்தாலும், ரஜினி காங்கிரஸ் விவகாரம் சேம் ஸ்பீடில் பயணித்து வருகிறது.
இந்தச் சூழலில் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் ஆய்வு செய்ய வந்த திருநாவுக்கரசர், எடுத்த எடுப்பிலேயே ராகுல்காந்தியை ரஜினி சந்திப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என்று கூறினார்.
மாட்டிறைச்சி விவகாரம் குறித்தும், கட்டட தீ விபத்து குறித்து மட்டுமே பேசிய திருநாவுக்கரசர் ரஜினி விவகாரத்தை மட்டுமே செலக்டிவ் அம்னீசியாவாகக் கருதி தவிர்த்துவிட்டார். ரஜினி குறித்து மீண்டும் ஒருமுறை திரும்பச் சொல்லுங்கள் திருநாவுக்கரசர்.....!