மதுரை 6வது பட்டாலியன் போலீஸ் ஸ்டோரில் கொள்ளையோ.!கொள்ளை... புலம்பும் போலீஸார்கள்.. நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்

By Thiraviaraj RMFirst Published May 5, 2020, 7:53 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கில் காவலர்கள் யாரும் வெளிமார்க்கெட் பல்பொருள் அங்காடிகளில் மளிகை சாமான்கள் வாங்க முடியாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அதிகமான அளவில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கிருமி நாசினி தெளிக்க கூட அங்கே மருந்து வைக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பொருள்களின் விலையும் அளவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

T.Balamurukan

காவல்துறையில் உள்ள காவலர்கள் நலனுக்காக ஐஜி முத்துக்கருப்பன் இருக்கும் போது போலீஸ் ஸ்டோர் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஸ்டோரில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து வகையான, தரமான மளிகைப் பொருள்கள் குறைந்த விலையில் ஒரே இடத்தில் கிடைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த ஸ்டோர்.
மதுரை 6வது பட்டாலியன் சார்பில் போலீஸ் ஸ்டோர், டீ கடை என நடத்தப்பட்டு வருகின்றது. காவலர்களுக்கு வேலை பளு காரணமாக மளிகை சாமான்கள் வெளியில் போய் வாங்க முடியாத சிரமத்தை நீக்குவதற்காக ஆரம்பிக்க பட்டது இந்த அங்காடி.இங்கு எல்லா விதமான பொருள்கள் கிடைத்தாலும் பெரும்பாலான காவலர்கள் அங்கே குடியிருக்கும் காவலர்கள், அதிகாரிகள் கூட இந்த ஸ்டோரில் பொருள்கள் வாங்குவதில்லையாம்.

கொரோனா ஊரடங்கில் காவலர்கள் யாரும் வெளிமார்க்கெட் பல்பொருள் அங்காடிகளில் மளிகை சாமான்கள் வாங்க முடியாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அதிகமான அளவில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கிருமி நாசினி தெளிக்க கூட அங்கே மருந்து வைக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பொருள்களின் விலையும் அளவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் காவலர்கள் பணி மகத்தானதாக அமைந்துள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு லீவு, ஓய்வு கிடைக்காமல் இருப்பதால் இந்த ஸ்டோரில் தான் காவலர்களின் குடும்பங்கள் பொருள்கள் வாங்கிச் செல்லுகிறார்கள் . வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ உளுந்து ரூ116க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் போலீஸ் ஸ்டோரில் ஏப்ரல் மாதம் ஒரு கிலோ உளுந்து ரூ140க்கும் மே மாதம் ஒரு கிலோ உளுந்து ரூ144க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. இது போன்று தான் எல்லாப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகிறதோ என்கிற சந்தேம் எழுந்துள்ளது என்கிறார்கள் அங்குள்ள காவலர்கள். நடவடிக்கை எடுப்பது யாரோ..? அதிகமாக விற்கு பணம் யாருக்கோ...? 
 
click me!