தமிழகம் முழுவதும் தேர்வுதாள் திருத்தும் மையங்களை அதிகப்படுத்துங்கள்.! ஒரே அறைக்குள் அடைக்காதீர்.! ஆசியர்கள்..

By Thiraviaraj RMFirst Published May 5, 2020, 7:10 PM IST
Highlights

கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னிட்டு வைரஸ் தொற்று ஏற்படாத வகையில்  தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க அரசு வலியுறுத்தி வருகின்றது. அதனை நடைமுறைப்படுத்திட  கூடுதல் விடைத்தாள் மதிப்பீடு மையங்களை ஏற்படுத்த பள்ளிக் கல்வித் தேர்வுத்துறை முன் வரவேண்டும்

T>Balamurukan

பதினொன்று,பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அவர்கள் எழுதிய தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்னும் நடைபெறாமல் இருக்கின்றது.தமிழக கல்வி துறை அதற்கான வேலைகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளது.இந்த மதிப்பெண்கள் வெளியானால் தான் கல்லூரிகளில் மாணவர்கள் சேர முடியும். இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னிட்டு வைரஸ் தொற்று ஏற்படாத வகையில்  தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க அரசு வலியுறுத்தி வருகின்றது. அதனை நடைமுறைப்படுத்திட  கூடுதல் விடைத்தாள் மதிப்பீடு மையங்களை ஏற்படுத்த பள்ளிக் கல்வித் தேர்வுத்துறை முன் வரவேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி (அரசு உதவிபெறும் பள்ளி) ஆசிரியர் அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் நீ.இளங்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.

 ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒரு விடைத்தாள் மையம் அடிப்படையில் அரசுப் பொதுத் தேர்வு விடைத்தாள் மையங்கள் பெரும்பாலும் இருந்து வருகின்றன. ஆனால் இன்று இருக்கும் கால சூழ்நிலைக்கு ஏற்புடையதாக இருக்காது.   தனி மனித இடைவெளியைக்  கருத்தில் கொண்டு ஒரு கல்வி மாவட்டத்திற்கு கூடுதல் விடைத்தாள் மையத்தை ஏற்படுத்த வேண்டும். முதன்மைத் தேர்வர் (CE) கூர்ந்தாய்வாளர் (SO) உதவித் தேர்வாளர் கொண்ட ஒரு குழுவிற்கு ஒரு அறை என்ற அடிப்படையில் அறைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒரு குழுவில் அதிகமான உதவித் தேர்வாளர்களை நியமனம் செய்யாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சில ஆசிரியர்கள் பணியாற்றுவது ஒரு மாவட்டமாகவும் அவர்கள் இருப்பிடம் ஒரு மாவட்டமாகவும் இருந்தால் அவர்கள் இருப்பிட மாவட்டத்தில் விடைத்தாள் மதிப்பீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். விடைத்தாள் மதிப்பீடு மையத்தில் நாள்தோறும் கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும்.

click me!