வீட்டு வசதிவாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளார். 2 வருடத்திற்கு மேல் தண்டனை விதிக்கும் பட்சத்தில் எம்எல்ஏ பதவியை ஐ,பெரியசாமி இழக்க நேரிடும் நிலை உருவாகியுள்ளது.
அமைச்சர் ஐ பெரியசாமி மீது வழக்கு
கடந்த திமுக ஆட்சி காலமான 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை வீட்டு வசதிவாரியத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், ஐ பெரியசாமி, இவர் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை எம்எல்ஏ, எம்பிகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
undefined
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க எதிர்ப்பு
இதற்கு எதிராக ஐ பெரியசாமி விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐ .பெரியசாமி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இவ்வழக்குகளை விசாரிக்கக் கூட என வாதிடப்பட்டது. ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து ஐ.பெரியசாமி வழக்கின் இறுதி விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடத்தினார். இரண்டு நாட்களும் மனுதாரர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில்இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பளிக்கவுள்ளார்.
இன்று தீர்ப்பு- அமைச்சர் பதவி தப்புமா.?
ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார். அடுத்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் மீதான வழக்குகளும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பும் விரைவில் வெளியாக இருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்