அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து..! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

By Ajmal Khan  |  First Published Sep 21, 2022, 4:53 PM IST

வேளாண் சட்டத்திற்கு எதிராக கொரோனா கட்டுப்பாடுகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கடந்த 2020ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி முறையிட்ட நிலையில், வழக்கானது ரத்து செய்யப்பட்டுள்ளது.


வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Tap to resize

Latest Videos

வழக்குப் போடுங்கள் காத்திருக்கிறேன்..! மநுஸ்மிருதியை படித்து காட்டி தோலுரிப்பேன்- பாஜகவை அலறவிட்ட ஆ.ராசா

ரத்து செய்து நீதிபதி உத்தரவு

இந்த வழக்கு ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டதாகவும், விதிகளை மீறவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்

துணை பொதுச்செயலாளர் பதவி யாருக்கு..? புதுக்கோட்டை விஜயாவிற்கு வாய்ப்பா..? ஓரங்கட்டப்படுகிறாரா கனிமொழி...?

 

click me!