சிந்தியாவின் மகனை சிந்திக்க வைத்த பிரதமர் மோடி... 60 நிமிடங்களில் காங்கிரஸ் ஆட்சியை காலி பண்ணிய பாஜக..?

Published : Mar 10, 2020, 03:27 PM IST
சிந்தியாவின் மகனை சிந்திக்க வைத்த பிரதமர் மோடி... 60 நிமிடங்களில் காங்கிரஸ் ஆட்சியை காலி பண்ணிய பாஜக..?

சுருக்கம்

பரபரப்பான சூழலில் ஜோதிராதித்ய சந்தியா திடீரென பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வெளியே வந்த சில நிமிடங்களில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேரந்த ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர். 

மத்திய பிரதேச அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வரும் சூழலில் ஜோதிராதித்ய சிந்தியா தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய பிரதேசத்தில் மெஜாரிட்டியை இழந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது. 

மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2018-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாலும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த சூழலை சரியாக பயன்படுத்தி 107 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள பாஜக ஆட்சியை கைப்பற்ற ரகசியமாக பல்வேறு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியது. 

இதையும் படிங்க;- காதல் மனைவியின் கண்முன்னே தலித் கணவர் கொடூர கொலை.. கூலிப்படையை ஏவிய அம்ருதாவின் தந்தை தற்கொலை..!

இந்நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் அமைச்சர் 6 பேர் உள்பட 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென கட்சி தலைமையிடம் தெரிவிக்காமல் பெங்களூரு சென்றனர். இதையடுத்து மத்திய பிரதேசத்தில் கூண்டோடு அமைச்சர்களை பதவி விலகச் செய்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்க காங்கிரஸ் தலைமை அதிரடி முடிவு எடுத்தது. 

இதையும் படிங்க;- 63 வயது கிழவியுடன் கள்ளக்காதல்... உல்லாசத்திற்கு தடையாக இருந்த தாய்க்கு நேர்ந்த பகீர் சம்பவம்..!

இந்த பரபரப்பான சூழலில் ஜோதிராதித்ய சந்தியா திடீரென பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வெளியே வந்த சில நிமிடங்களில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேரந்த ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. 19 பேர் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 100-ஆக குறைந்துள்ளது. அதேசமயம் பாஜக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 107-ஆக இருக்கும். இதனையடுத்து, கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தேசியத் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டது ஏன்..? பாஜகவின் எதிர்காலத்திற்கான பலே திட்டம்..!
இனி நாடே விசில் போடும்.. மக்கள் சின்னம் விசில்.. வெற்றி ஆரம்பம்.. தளபதி விஜய் ஹேப்பி.. தவெக குஷி!