யெஸ் பேங்கை அடுத்து இந்த தனியார் வங்கிதான் டார்கெட்..? அதிர வைக்கும் சுப்ரமணியசாமி... வாடிக்கையாளர்களே உஷார்!

By Thiraviaraj RMFirst Published Mar 10, 2020, 2:56 PM IST
Highlights

 அடுத்து யெஸ் வங்கியை போலவே ஐசிஐசியை, ஆக்சிஸ், பேங்க் ஆஃப் பரோடா, எச்.டி.எஃப்.சி போன்ற வங்கிகளின் பெயர்களும் திவாலாக்கலாம் என கணிக்கப்படுகின்றன. 

யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி கையகப்படுத்தியதை அடுத்து A என்கிற எழுத்தில் தொடங்கும் அடுத்த தனியார் வங்கியும் கையகப்படுத்த உள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 

மோடி தலைமையினாலான பாஜக அரசில் இந்திய நாட்டின் பொருளாதாரமானது அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடுகள் கூட எதிர்பார்த்த அளவு இல்லை. நேற்று மட்டும் இந்திய பங்குச் சந்தையில் 7 லட்சம் கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவே யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே யெஸ் வங்கி அதிக கடன் கொடுத்து திவாலானதால் அந்த வங்கியை இப்போது ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. அந்த வங்கியில் பணம் போட்டவர்கள் மாதம் ரூ.50,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கிகளிலும் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன.

ஆனால் மற்றொரு பக்கம் பாஜகவும், ஆதரவாளர்களும் நாட்டில் பொருளாதார மந்தநிலையே இல்லை எனக் கூறி வருகின்றனர்.  அடுத்து யெஸ் வங்கியை போலவே ஐசிஐசியை, ஆக்சிஸ், பேங்க் ஆஃப் பரோடா, எச்.டி.எஃப்.சி போன்ற வங்கிகளின் பெயர்களும் திவாலாக்கலாம் என கணிக்கப்படுகின்றன. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து, "ஏற்கெனவே நான் 2015-ம் ஆண்டே வங்கிகளின் வாராக்கடன் பற்றி எச்சரித்திருந்தேன்.

 

திவாலாகும் வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைப்பது எந்த பயனையும் தராது. இந்த மோசமான போருளாதர நிலையால் அடுத்தடுத்து திவாலாக 10 வங்கிகள் வரிசையில் நிற்கின்றன. அதில் ஆக்சிஸ் பேங்க் முதலாவதாக இருக்கலாம்" என சூசகமாக தெரிவித்திருந்தார். மேலும் மோடி அரசின் தனியார்மயமாக்கும் நடவடிக்கையையும் அவர் விமரிசித்துள்ளார். 

click me!