ம.பி.யில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? முடிவு மயாவாதி கையில்!

By vinoth kumarFirst Published Dec 11, 2018, 3:24 PM IST
Highlights

15 ஆண்டுகளாக பாஜக கோட்டையாக இருந்து வரும் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கை ஓங்கியே உள்ளது. இதில் காங்கிரஸ்-பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் நிலவரம் மாறி மாறி வருகிறது. ஒரு நேரம் பாஜக முன்னிலை வகிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இரண்டு கட்சிகளும் 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னிலைப் பெற்று வருகிறது. சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. மேலும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கை ஓங்கி இருந்தாலும், ஆட்சிமைப்பதற்கு தேவையான மெஜாரிட்டி இல்லாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி ஆதரவு தெரிவித்துள்ளது.  

இதில் 15 ஆண்டுகளாக பாஜக கோட்டையாக இருந்து வரும் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கை ஓங்கியே உள்ளது. இதில் காங்கிரஸ்-பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் நிலவரம் மாறி மாறி வருகிறது. ஒரு நேரம் பாஜக முன்னிலை வகிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இரண்டு கட்சிகளும் 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

அதனால் மற்ற கட்சிகளின் ஆதரவை பெற கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்து அடுத்தபடியாக கோண்ட்வனா கண்டண்ட்ரா கட்சி இரண்டு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சமாஜ்வாடி, பகுஜன் சங்கர்ஸ் தாள் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கின்றன. இதன் காரணமாக சுயேச்சைகள், பிற கட்சி எம்.எல்.ஏக்களுக்கு பெரிய கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவர்களை வளைக்க பாஜக முயற்சிக்கும் என்பதாலும், காங்கிரசும் வளைக்கப் பார்க்கும் என்பதாலும் பணம் கோடிக்கணக்கில் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

இந்நிலையில் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கும் அகிலேஷ் யாதவின் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் 4 இடங்களில் முன்னிலையில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி தன்னுடைய முடிவை இதுவரை அறிவிக்கவில்லை. ஆனாலும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கூட்டணியுடன் உடன்பாடு எட்டாத நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தில் தனித்து போட்டியிட்டது. ஆனால் தற்போது ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க மாயாவதியின் உதவி தேவைப்படுகிறது. இதனால் அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கியுள்ளது. 

click me!