தினகரனை பீதியிலேயே வைத்திருக்கும் செந்தில்பாலாஜி...! தெளியத்தெளிய அடிக்கும் ரகசியம்!

Published : Dec 11, 2018, 02:24 PM IST
தினகரனை  பீதியிலேயே வைத்திருக்கும் செந்தில்பாலாஜி...! தெளியத்தெளிய அடிக்கும் ரகசியம்!

சுருக்கம்

தமிழக அரசும், உளவுத்துறையும் நான் தி.மு.க.வுக்கு போவதாக வதந்தி பரப்புகின்றன.” என்றவர் தொடர்ந்து, “நான் என்னுடைய ஆதரவாளர்களிடமும், உங்களிடமும் சொல்லாமல் எங்கும் போக மாட்டேன். இப்போது நான் தி.மு.க.வில் சேர்வது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை.” என்று கூறியுள்ளார்.

தினகரன் கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக இருக்கும் கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி, தி.மு.க.வுக்கு தாவப்போகிறார் என்று கடந்த சில நாட்களாக அரசியல் அரங்கில் பரபரப்பு. செந்திலும், தன் நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது, நிருபர்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல் மெளனம் காப்பது என்று இந்த டெம்போவை ஏற்றிக் கொண்டே வந்தார். 

இந்நிலையில் நேற்று திடீரென டி.டி.வி.யை சந்தித்து மலர்கொத்து கொடுத்தார். ஆனாலும் நமது ஏஸியாநெட் தமிழ் இணையதளம். தான் தி.மு.க.வுக்கு போவதாக கிளம்பிய பரபரப்பை செந்தில்பாலாஜியே திட்டம் போட்டு கிளப்பினாரா? என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை நேற்று வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அரசிய வாரப்பத்திரிக்கை ஒன்றுக்கு மைக்ரோ பேட்டி கொடுத்திருக்கும் செந்தில்பாலாஜின் வார்த்தைகள், நாம் யூகித்த கோணத்தை அப்படியே உறுதி செய்திருக்கின்றன. 

அதாவது அந்த மைக்ரோ பேட்டியில், “தமிழக அரசும், உளவுத்துறையும் நான் தி.மு.க.வுக்கு போவதாக வதந்தி பரப்புகின்றன.” என்றவர் தொடர்ந்து, “நான் என்னுடைய ஆதரவாளர்களிடமும், உங்களிடமும் சொல்லாமல் எங்கும் போக மாட்டேன். இப்போது நான் தி.மு.க.வில் சேர்வது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை.” என்று கூறியுள்ளார். 

அதாவது தான் கட்சி மாறப்போவதில்லை! தினகரனின் விசுவாசியே! என்றுமே சின்னம்மாவின் ஆதரவாளர்! என்றெல்லாம் கூறாமல், இப்படி பட்டும் படாமலும் பேசியுள்ளது தினகரனை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. செந்தில் பாலாஜி தினகரனை தெளியவைத்து, தெளியவைத்து மீண்டும் பீதியில் உறைய வைப்பதாக அ.ம.மு.க.வினர் புலம்புகின்றனர். ஏற்கனவே தங்கதமிழ்செல்வன் தனியாக குழப்பிக் கொண்டிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் இந்த டிராமா தினாவை வெகுவாய் பாதித்திருக்கிறதாம். இதற்கும் மேலே அவரது குரு ‘மூக்குபொடி சித்தர்’ மறைவால் அநியாயத்துக்கு துவண்டுவிட்டாராம் தினகரன்.

PREV
click me!

Recommended Stories

சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!