மோடி அலையை அடித்து காலி செய்த ராகுல்... கோட்டைக்குள் நுழைந்து தட்டிய ஸ்டிரைக் ரேட்!

Published : Dec 11, 2018, 01:21 PM ISTUpdated : Dec 11, 2018, 02:19 PM IST
மோடி அலையை அடித்து காலி செய்த ராகுல்... கோட்டைக்குள் நுழைந்து தட்டிய ஸ்டிரைக் ரேட்!

சுருக்கம்

காங்கிரசின் தலைவராக முதல் முறையாக பதவியேற்ற ராகுல்  மோடி அலையை தனது செல்வாக்கால் அடித்து வீழ்த்தியுள்ளார். 

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்  வாழ்க்கையில் நினைத்துக் கூட பார்க்க முடியாத படு தோல்வி தான் பரிசாக கிடைத்திருக்கிறது பிஜெ.பிக்கு. வாக்கு என்னும் ஐந்து மாநிலங்களில் மூன்றில் மோடியை விட ராகுலின் கை செமத்தியாக ஓங்கி நிற்கிறது. ராஜஸ்தானாவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் பி.ஜே.பி. பெரிதாய் நம்பிக்கை வைத்திருந்த மத்தியபிரதேசத்திலும் பிய்த்துக் கொண்டு விழுகிறது வாய்ப்பு. நான்கில் பி.ஜே.பி.யின்  அதல பாதாளத்தில் கவிழ்த்துக் கிடக்கிறது இருக்கிறது. 

இந்த நிலையில் காங்கிரஸ் முகாமுக்கு வெற்றி ஒரு பக்கம் குஷியைக் கொடுத்தாலும், மறுபக்கம் இன்னொரு சந்தோஷ சமாச்சாரமும் வந்து சேர்ந்திருக்கிறது. அதாவது ராகுல் காந்தி தலைவராக பதவி ஏற்று முதல் முறையாக பாஜகவின் முக்கிய மாநிலங்களில் அடித்துக் கொண்டிருந்த மோடி அலையை அடித்து வீழ்த்தியுள்ளார் ராகுல். அதாவது ஸ்டிரைக் ரேட்டில் மோடியை முந்தியுள்ளார் ராகுல்.

ராஜஸ்தானில் மோடி பிரசாரம் செய்த தொகுதிகளில் 50% அளவுக்குத்தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மற்ற அனைத்திலும் ராகுல் தான் ரணகளப்படுத்தியிருக்கிறார். இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவை இன்னும் ஐந்தே மாநிலங்களில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் தனது அடுத்து இன்னிங்க்ஸை தொடங்க இருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்