இங்கிலீஷில் பேசி கலக்கிய மதுசூதனன் - செங்கோட்டையனையும் சசிகலாவையும் கேளுங்கனு கொக்கரிக்கும் ஆதரவாளர்கள்

 
Published : Mar 17, 2017, 04:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
இங்கிலீஷில் பேசி கலக்கிய மதுசூதனன் - செங்கோட்டையனையும் சசிகலாவையும் கேளுங்கனு கொக்கரிக்கும் ஆதரவாளர்கள்

சுருக்கம்

madhusudhanan pressmeet in english

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் அணி சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்தார்.

மதுசூதனன் ஆங்கில புலமையை பார்த்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் சில நெட்டிசன்கள்  எங்கேயோ இருக்கும் செங்கோட்டையனையும் சசிகலாவையும் வம்புக்கு இழுக்கின்றனர்.

பேஸ்புக், வாட்ஸ்சப் போன்ற சமூக வலைதளங்களில் மதுசூதனின் ஆங்கில பேட்டியை பதிவிட்டு ஒத்தைக்கு ஒத்தை வரிங்களா? என சவால் விடுக்கின்றனர்.

நான் இந்த தொகுதியில் 60 வருடங்களாக வசித்து வருகிற மண்ணின் மைந்தன் ஆவேன்.

இரட்டை இலை சின்னத்திலேயே நான் போட்டியிட போகிறேன்.

கூட்டணி குறித்தெல்லாம் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் தனக்கு நல்ல செல்வாக்கு உள்ளதால் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கபட்டிருந்த போது ஆங்கில சேனல் நிருபரின் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரைகுறையாக பதில் அளித்தார்.

இதேபோன்று இந்தியா டுடே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகலாவும் ஆங்கில சேனல் நிருபரின் கேள்விக்கு சரிவர பதில் அளிக்கவில்லை.

இதை வைத்துதான் கலாய்க்கிறார்கள் ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள். 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்