மீண்டும் ஒரு துர்மரணம்... உயிர்குடிக்கும் மாவட்டமா தூத்துக்குடி..? மு.க. ஸ்டாலின் காட்டம்!

By Asianet TamilFirst Published Jun 27, 2020, 10:08 PM IST
Highlights

“காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்காத நிலையில், எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி போலிஸாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார். உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது."

 உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த சில தினங்களுக்கு முன்பு கணேசமூர்த்தி, எட்டையபுரம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார், அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த பிறகு, இந்தச் சம்பவத்தை கூறி புலம்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கணேசமூர்த்தி இரு  நாட்களுக்கு முன்பு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சடலத்தை கைப்பற்றி போலீஸார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதனையடுத்து கணேசமூர்த்தியின் தற்கொலைக்குக் காரணம் போலீஸார்தான் என்று கூறி அவருடைய உறவினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்ட தூத்துக்குடி எம்.பி. கனிமொழி,  கணேசமூர்த்தி குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும் திமுக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியையும் வழங்கினார். இந்நிலையில், இந்தச் சம்பவம் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கிடைக்காத நிலையில்
எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி போலீசாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார்.

உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது.

அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் தவறு செய்பவர்களை காப்பாற்றுகிறாரா ? https://t.co/Cyu5um1mWh

— M.K.Stalin (@mkstalin)

 

 

அதில், “காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்காத நிலையில், எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி போலிஸாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார். உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது. அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் தவறு செய்பவர்களைக் காப்பாற்றுகிறாரா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மு.க. ஸ்டாலின்.

 

click me!