காங்கிரசுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன உறவு..!! கேள்விகளால் துளைக்கும் ஜே.பி நட்டா..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 27, 2020, 9:17 PM IST
Highlights

பில்லியன் டாலரிலிருந்து 36.2 பில்லியன் டாலராக ஏன் அதிகரித்தது? 3. காங்கிரசுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உள்ள உறவு என்ன? 

காங்கிரஸ் கட்சி நிர்வகித்துவரும் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனா நிதி வழங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. இது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சீனாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது என குற்றஞ்சாட்டி வருகிறார். இது முக்கிய விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 கேள்விகளை ஜே.பி நட்டா முன்வைத்துள்ளார். அதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குறிக்கோள்களை மேம்படுத்துவதற்காக இந்த அறக்கட்டளையை 21 ஜூன் 1991 அன்று சோனியா காந்தி தொடங்கினார். கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், நலிந்த மற்றும் ஊனமுற்றோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இது நன்கொடைகள் மற்றும் முதலீடுகளின் வருமானத்துடன் செயல்படுகிறது. சோனியா காந்தி அதன் தலைவராக உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பி.சிதம்பரம் ஆகியோர் அறங்காவலர்களாக இருந்து வருகின்றனர். ஏன் இதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்றால், 
ராஜீவ் காந்தி அறக்கட்டளை 2005-06ல் சீனாவிடமிருந்து முதலில் 3 லட்சம் பின்னர் 90 லட்சம் ரூபாய் பெற்றதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வியாழக்கிழமை தெரிவித்தார். அறக்கட்டளையின் ஆண்டு அறிக்கையின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது. 2005-06 ஆண்டு அறிக்கையில் அறக்கட்டளைக்கு நன்கொடையாளர்கள் பட்டியலில் சீனாவின் பெயரும் இடம்பெற்றுள்ளன. 

 

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜே.பி நட்டா, ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிடம் நிதி பெற்ற விவகாரம் குறித்து மூன்றாவது நாளாக  கேள்வி எழுப்பி உள்ளார். இந்த நிதி குறித்து சோனியா காந்திக்கு 10 கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார், மேலும் கொரோனா அல்லது சீனாவுடனான எல்லை நிலைமையை காரணம்காட்டி கேள்விகளை தவிர்க்க முயற்சிக்க வேண்டாம்  என்றும் அவர் சோனியாவுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் 130 கோடி நாட்டு மக்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது என்ன வேலை செய்தது,  நாட்டை எவ்வாறு காட்டி கொடுத்தது என்பதை அறிய விரும்புகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் முன்வைத்துள்ள 10 கேள்விகள் பின்வருமாறு :- 1. ராஜீவ் காந்தி அறக்கட்டளை 2005 முதல் 2009 வரை சீனாவிலிருந்து நன்கொடைகளைப் பெற்றது.  இது எதைக் குறிக்கிறது?
 2. பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RECP)அறக்கட்டளையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? சீனாவுடனான வர்த்தகத்தின் போது இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 1.1 பில்லியன் டாலரிலிருந்து 36.2 பில்லியன் டாலராக ஏன் அதிகரித்தது? 3. காங்கிரசுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உள்ள உறவு என்ன? இருவருக்கும் இடையில் எந்ததெந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன, 4. ராஜீவ் காந்தி அறக்கட்டளை சீனாவின் மத்திய இராணுவ ஆணைய அறக்கட்டளையுடன் நட்பான உறவை கொண்டிருந்ததா? இது நாட்டின் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்த முயன்றதா? 5.2005-08 ஆம் ஆண்டில் பிரதமரின் நிவாரண நிதி அறக்கட்டளைக்கு திருப்பிவிடப்பட்டது ஏன்? 

6. பிரதமர் தேசிய நிவாரண நிதியத்தின் தணிக்கையாளர் யார்? தாகூர் மருத்துவநாதன் & ஐயர் நிறுவன தணிக்கையாளராக இருந்தனர். ராமேஸ்வர் தாக்கூர் அதன் நிறுவனர், அவர் ஒரு மாநிலங்களவை எம்.பி. மற்றும் 4 மாநிலங்களின் ஆளுநராக இருந்தார். அவர் பல தசாப்தங்களாக தணிக்கையாளராக இருந்தார். அத்தகையவர்களை தணிக்கையாளராக்குவதன் மூலம் அரசாங்கம் என்ன செய்ய முயற்சித்தது?  7. ஜவஹர் பவன் கட்டப்பட்ட விலைமதிப்பற்ற நிலம், காலவரையற்ற குத்தகைக்கு ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு எவ்வாறு வழங்கப்பட்டது? 8. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் கணக்குகள் ஏன் சிஏஜி தணிக்கை செய்யவில்லை? இந்த அடித்தளத்தில் ஏன் தகவல் அறியும் உரிமை நடைமுறைப்படுத்தப்படவில்லை? 9. ராஜீவ் காந்தி அறக்கட்டளை மட்டுமல்ல, இங்கு நடந்தது அனைத்துமே  மேசடி ஆனால் அது ஒரு நன்கொடையாக கருதப்பட்டது. இந்த பணம் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன். இது ஏன் ஒரு குடும்பத்தால் நடத்தப்படுகிறது. 10. காங்கிரஸிடம் எனது கேள்வி என்னவென்றால், மெஹுல் சோக்ஸியிடமிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஏன் பணம் வாங்கப்பட்டது? உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்துள்ளார். 
 

click me!