கே.என்.நேரு நடத்திய பிரஸ் மீட்டில் பங்கேற்ற ரிப்போர்ட்டருக்கு கொரோனா..அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள்!

Published : Jun 27, 2020, 09:08 PM IST
கே.என்.நேரு நடத்திய பிரஸ் மீட்டில் பங்கேற்ற ரிப்போர்ட்டருக்கு கொரோனா..அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள்!

சுருக்கம்

ஏ.சி. அறையில் நடந்த இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் சுமார் 20 பேர் பங்கேற்றனர். மேலும் திமுக நிர்வாகிகள் 25 பேர் வரை இருந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த ஒரு சில மணி நேரத்தில், அதில் பங்கேற்ற தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. 

திருச்சியில் திமுக முதன்மை செயலாளர் கே.என். நேருவின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற  செய்தியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், திமுகவினர் அச்சத்தில் உள்ளனர்.
  திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு திருச்சியில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுகவை குறை கூறி பேசியதற்கு பதில் அளிப்பதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். கூட்டமாக வேண்டாம் என்பதற்காக தொலைக்காட்சி ஊடகங்களை மட்டும் அழைத்திருந்தார். 
ஏ.சி. அறையில் நடந்த இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் சுமார் 20 பேர் பங்கேற்றனர். மேலும் திமுக நிர்வாகிகள் 25 பேர் வரை இருந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த ஒரு சில மணி நேரத்தில், அதில் பங்கேற்ற தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு சளி, இருமல்  தொந்தரவு இருந்ததால் இரு தினங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.


ஆனால், அந்தப் பரிசோதனைக்குப் பிறகு அவர் தனித்திருக்காமல் வழக்கம்போல பணியில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகவல் தெரிந்த உடன் அந்தச் செய்தியாளர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துவிட்டதாக தெரிகிறது. இந்த விவரம் கே.என். நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுக்கும் கூட்டத்தில் பங்கேற்ற மற்ற செய்தியாளர்களுக்கும் தெரிய வர அதிர்ச்சி அடைந்தனர். கே.என். நேரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துவிட்டு, சொந்த ஊரில் தனிமைப்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மற்றவர்கள் வீடுகளில்  தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி