உங்களை அப்படிச் சொல்லிக் கொள்வது கூச்சமாக இல்லையா..? எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கிடுக்குப்பிடி..!

By Thiraviaraj RMFirst Published Jul 30, 2019, 3:31 PM IST
Highlights

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விவசாயியாக கருத முடியாது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விவசாயியாக கருத முடியாது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் 3-வது நாளாக அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட ஊசூரில் பேசினார். அப்போது அவர், ‘’வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றுள்ள 37 எம்.பி.க்களும் அங்கு தமிழக பிரச்சனைகள் குறித்து நாள்தோறும் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத அ.தி.மு.க.வினர் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று விட்டதாக கூறுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மட்டும் அ.தி.மு.க. அரசு திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியில் மட்டும் மொத்தம் ரூ.28,179 கோடி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1.627 கோடி, குடிநீர் திட்டங்களுக்காக ஒதுக்கிய ரூ.2,064 கோடி, சாலை, பாலங்களுக்காக ஒதுக்கிய ரூ.2,034 கோடி, ஏற்காட்டில் மேம்பாலம் கட்ட ஒதுக்கிய ரூ.138.95 கோடி, நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒதுக்கிய ரூ.1,779,49 கோடி நிதியும் அடங்கும்.

எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என்று கூறிவருகிறார். 8 வழிச்சாலை திட்டத்தால் வாழ்வாதாரமே பறிபோகும் என விவசாயிகள் போராட்டங்கள் நடத்திய நிலையில் ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் அந்த தடைக்கு தடையாணை பெற இந்த அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் டெல்டா பகுதி விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியை ஒரு விவசாயியாக கருத முடியாது. வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்போது காவிரி கூட்டு குடிநீர் விரிவுப்படுத்தப்பட்டு, விடுபட்ட அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்கவும், விளைபொருட்களுக்கான குடிநீர் பதனக் கிடங்கு, அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அவர் தெரிவித்தார்.

click me!