‘தொந்தரவு செய்தால் போலீஸுக்குப் போவேன்’...அரசியலுக்கு முழுக்குப் போட்ட ஜெ’தீபா...

By Muthurama LingamFirst Published Jul 30, 2019, 1:10 PM IST
Highlights

தமிழக அரசியல் களத்தில் அவ்வப்போது நகைச்சுவை எபிசோடுகளை வழங்கி வந்த தீபாம்மா என்கிற தீபா அரசியலுக்கு திடீர் முழுக்கு போட்டார். ‘அரசியல் ரீதியாக தொடர்புகொண்டு தொந்தரவு செய்தால் போலீஸில் புகார் செய்வேன்’என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார் தீபா.

அதிமுகவின் மீது கொண்ட அதிருப்தியால் புதிதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் துவங்கினார் ஜெ தீபா. அதன் பின்னர் இடையில் அதிமுகவில் இணைந்து செயல்பட விரும்புவதாக  எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக ஜெ. தீபா தெரிவித்தார்.

இந்நிலையில் அரசியல் உலகம் அதிர்ச்சி அடையும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது. எனது குடும்பம்தான் எனக்கு முக்கியம். குழந்தை பெற்றுக்கொண்டு கணவருடன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை. எனக்கு அரசியலே வேண்டாம். என்னை தொலைப்பேசியில் அழைக்காதீர்கள். மீறி அழைத்தால் போலீஸில் புகார் அளிப்பேன். அதேபோல் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அதிமுகவில் இணையலாம். முழுமையாக பொது வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். எனவே தீபா பேர்வை என்ற பெயரில் யாரும் என்னை தொந்தரவு செய்து கஷ்டப்படுத்தாதீர்கள்’ என தெரிவித்துள்ளார். 

click me!