ஸ்டாலின் தலைமை திமுகவினருக்கே பிடிக்கவில்லை... கட்சியை ரெண்டா உடைச்சிடுவோம்... ராஜேந்திரபாலாஜி அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Jul 30, 2019, 1:05 PM IST
Highlights

மு.க.ஸ்டாலின் தலைமை திமுகவினருக்கே பிடில்லவில்லை. எதாவது செய்தால் கட்சியை உடைத்துவிடுவோம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
 

மு.க.ஸ்டாலின் தலைமை திமுகவினருக்கே பிடில்லவில்லை. எதாவது செய்தால் கட்சியை உடைத்துவிடுவோம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகரை சேர்ந்தவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. ஜெயலலிதா இருந்தவரை அமைதியாக இருந்தவர் அதன் பிறகு பாட்டாசாய் வெடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஏதோ விளையாட்டாக அவர் பேசுவதாக நினைத்தனர். அதன் பிறகு ஆழமாக, தெளிவாக அவர் பேசி வருவதை அதிமுகவினரும் அவரது தொகுதி மக்களும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். 

அந்த வகையில் மோடி எங்கள் டாடி எனச் சொன்னார். அடுத்து எல்லாத்தையும் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான் என்றார்... கமலோட நாக்கை அறுப்பேன் என்றெல்லாம் அழுத்தம் திருத்தமாக குரலை உயர்த்தி வந்தார். அதிமுகவில் திருமணமாகாத ஒரே அமைச்சரான ராஜேந்திர பாலாஜி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

வேலூரில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ''நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சி, ஜெயலலிதா உயிரைக் கொடுத்து உருவாக்கிய ஆட்சி. குறுநில மன்னராக விளங்குகிற ஸ்டாலின் போன்றவர்கள், ஆட்சியை அகற்ற முயல்கின்றனர். அப்படி நடந்தால், ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி, அதிமுக தொண்டர்கள் 1 லட்சம் பேர் திரள்வார்கள். திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் பேரவைக்குள் நுழையவே முடியாது. ஒருவேளை உள்ளே வந்து, எங்களிடம் பிரச்சினை செய்துவிட்டு வெளியேற முடியாது. அந்த நிலை, ஸ்டாலினுக்கு உருவாகும்.

ஆட்சியைப் பிடிக்கும் கனவெல்லாம் இங்கே நடக்காது. அந்தப் பூச்சாண்டியை எல்லாம் ஸ்டாலின், இங்கே காட்ட வேண்டாம். காட்டிப் பார்க்க வேண்டியதுதானே? சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்ததே. உள்ளே சென்றால் அத்தனையும் செய்துவிடுவோம் என்றார்களே. அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டியதுதானே? திமுக கட்சியையே உடைப்போம். திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எத்தனை பேர் ஓட்டு போடுவர் என்று பார்ப்போம். ஸ்டாலின் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களுடன் போனில் பேசியிருக்கிறார். 

எங்களிடம் எத்தனை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசியுள்ளனர் தெரியுமா? நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரட்டும். திமுக ஒன்று, இரண்டாகி விடும். கட்சியை இரண்டாக உடைத்து விடுவோம். அங்கிருந்து ஒரு குழு வெளியேற உள்ளது. ஸ்டாலின் தலைமை திமுகவில் யாருக்கும் பிடிக்கவில்லை’’ என அவர் கூறினார். 

click me!