திமுக ஆட்சிக்கு வந்த பிறகு..! மருமகன் அரசியல் ஆசைக்கு பிரேக் போடும் ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Jul 18, 2019, 3:22 PM IST
Highlights

நேரடி அரசியல் ஆசையால் சபரீசன் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது மாமனார் ஸ்டாலின் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நேரடி அரசியல் ஆசையால் சபரீசன் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது மாமனார் ஸ்டாலின் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு நேரடி அரசியல் செய்ய அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் பதவி உதயநிதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் தேர்தலிலும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உதயநிதிக்கு முன்பிருந்தே ஹைடெக் அரசியலில் களத்தில் இருப்பவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன். திமுகவின் டெல்லி விவகாரங்களை இவர் தான் கவனித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடங்கி ஸ்டாலின் பிரச்சாரம் வரை அனைத்திலும் சபரீசன் பங்கு இருந்தது. சபரீசன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

வழக்கத்திற்கு மாறாக சபரீசன் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சில இடங்களில் திமுகவின் போஸ்டர் அடித்திருந்தனர். சமூக வலைதளங்களில் சபரீசனை வாழ்த்தி விளம்பரம் செய்யப்பட்டன. மேலும் சபரீசனை நேரில்சந்தித்து திமுக நிர்வாகிகள் மாலை மரியாதை எல்லாம் செய்தனர். இதுநாள் வரை சபரீசன் இவற்றை எல்லாம் தவிர்த்து வந்தார். ஆனால் திடீரென அவர் இதனை ஏற்றுக் கொண்டதற்கு காரணம் நேரடி அரசியல் ஆசை என்கிறார்கள்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தால் சபரீசன் மத்திய அமைச்சராகியிருப்பது உறுதி. ஆனால் காங்கிரஸ் தோல்வியால் சபரீசன் நேரடிய அரசியல் பிரவேசம் தள்ளிப்போனது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சபரீசனுக்கும் ஸ்டாலின் குடும்பம் முடிசூட்டும் என்று கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது சபரீசனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குமாறு ஸ்டாலினின் கிச்சன் கேபினட் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து உதயநிதிக்கு பதவியை கொடுத்ததால் பெரிய அளவில் பிரச்சனைகள், விமர்சனங்கள் எழவில்லை. இதே போல் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு சபரீசனை முன்னிலைப்படுத்தினால் பிரச்சனை இருக்காது என்று ஸ்டாலின் கருதுகிறார் என்று சொல்கிறார்கள். எனவே திமுக ஆட்சிக்கு வரும் வரை சபரீசன் காத்திருந்து தான் ஆக வேண்டுமாம்.

click me!