திமுக போட்ட வழக்கில் தப்பித்தார் வைகோ... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Jul 18, 2019, 3:04 PM IST
Highlights

தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேல்முறையீட்டு மனு விசாரணை முடியும் வரை சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது. இந்திய ஒருமைப்பாட்டை பாதிக்காத வகையில் சிந்தித்து பேச வேண்டும் என உயர்நீதிமன்றம் வைகோவுக்கு அறிவுறுத்தி உள்ளது. வைகோ மனு மீதான விசாரணையில் ஆயிரம் விளக்கு காவல் ஆய்வாளர் பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

தி.மு.க ஆட்சி காலத்தில் 2009ஆம் ஆண்டு சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை முடிவில் சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 5 ஆம் தேதி அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது. 

தேச துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து வைகோ உயர்ட்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோவின் தண்டனையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
  

click me!