M.K.Stalin and Rahul : மு.க. ஸ்டாலின் வயது என்ன.? நம்ப மறுத்த சோனியா காந்தி.. ஆதாரம் காட்டிய ராகுல் காந்தி!

Published : Feb 28, 2022, 10:16 PM IST
M.K.Stalin and Rahul : மு.க. ஸ்டாலின் வயது என்ன.? நம்ப மறுத்த சோனியா காந்தி.. ஆதாரம் காட்டிய ராகுல் காந்தி!

சுருக்கம்

ஸ்டாலினுக்கு 69 வயது என்று அம்மாவிடம் கூறினேன். அதனை அம்மா நம்ப மறுத்தார். அப்படியெனில் ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அவர், 58 அல்லது 60-க்குள் இருக்கும் என்று கூறினார்.

‘தான் எப்படி இளமையாக இருக்கிறேன்’ என்பது பற்றி மு.க. ஸ்டாலின் இன்னொரு புத்தகத்தை எழுத வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  நகைச்சுவைவாகப் பேசினார். 

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக ‘உங்களில் ஒருவன்’ என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று நூலை வெளியிட்டார். இந்த விழாவில் ராகுல் காந்தி பேசும்போது ஸ்டாலின் வயது குறித்து நகைச்சுவையாகப் பேசியது, விழாவை கலகலப்பாக்கியது. நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியது இதுதான். “இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி என்னுடைய அம்மாவிடம் (சோனியா காந்தி) சொன்னேன். அவர் என்னிடம் மு.க.ஸ்டாலினுக்கு நாளை பிறந்தநாள் என்று சொன்னார். நான் அதற்கு, எனக்குத் தெரியும் என்று கூறினேன். 

அதன்பிறகு, என்னுடைய அம்மாவிடம் ஸ்டாலின் வயது என்னவென்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் எத்தனை வயது என்று என்னிடம் திரும்ப கேட்டார். அவருக்கு 69 வயது என்று அம்மாவிடம் கூறினேன். அதனை அம்மா நம்ப மறுத்தார். அப்படியெனில் ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அவர், 58 அல்லது 60-க்குள் இருக்கும் என்று கூறினார். உடனே, நான் கூகுள் செய்து ஸ்டாலினின் வயதைக் காட்டினேன். அப்போதுதான் அம்மா நம்பினார். இந்த நூலில் ஸ்டாலின் இளமையாக இருப்பது பற்றி எழுதியுள்ளாரா என்று தெரியாது. ஆனால், தான் இளமையாக இருப்பது குறித்து ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும்” ராகுல் காந்தி பேசியதைக் கண்டு மு.க ஸ்டாலின் உள்பட அனைவரும் சிரித்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்