நான் அந்தப் படத்தை எடுத்துட்டு இருக்குறப்பதான் பிரபாகரன் என்னை அழைச்சார்: சீமானின் ‘சிறப்பான’ கதைகள்..!

By Asianet TamilFirst Published Nov 15, 2019, 7:15 PM IST
Highlights

மிசா சட்டத்தில் கைதாகி, தான் மிக கடுமையான இன்னல்களை அனுபவித்ததாக ஸ்டாலின் பல வருடங்களாக சொல்லி வருவதை சமீபத்தில் மிகப்பேரிய டவுட்டுக்கு ஆளாக்கியுள்ளனர். அதேபோல் ஈழம் சென்று பிரபாகரனை தான் சந்தித்ததாக சீமான் சொல்லி வருவதையும் பெரிய சந்தேகத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

நான் அந்தப் படத்தை எடுத்துட்டு இருக்குறப்பதான் பிரபாகரன் என்னை அழைச்சார்: சீமானின் ‘சிறப்பான’ கதைகள்

தமிழக அரசியலில் ஒரு புது டிரெண்டு உருவாகியிருக்கிறது. அது, ஒரு தலைவர் தன் பலமாக எதை காட்டிக் கொண்டிருக்கிறாரோ அதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி ‘இது பொய்’ என்று பட்டாஸை பற்ற வைப்பதுதான். 

மிசா சட்டத்தில் கைதாகி, தான் மிக கடுமையான இன்னல்களை அனுபவித்ததாக ஸ்டாலின் பல வருடங்களாக சொல்லி வருவதை சமீபத்தில் மிகப்பேரிய டவுட்டுக்கு ஆளாக்கியுள்ளனர். அதேபோல் ஈழம் சென்று பிரபாகரனை தான் சந்தித்ததாக சீமான் சொல்லி வருவதையும் பெரிய சந்தேகத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீமான் இப்போது கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். பிரலப அரசியல் புலனாய்வு வாரம் இருமுறை இதழொன்றில் தான் எழுதிவரும் தொடரில் இது பற்றி படிப்படியாக விவரிக்க துவங்கியுள்ளார். 

அதில் ‘தம்பி’ படத்தை நான் சிரமப்பட்டு எடுத்துக் கொண்டிருந்த போதுதான் மேதகு பிரபாகரன் என்னை ஈழத்துக்கு அழைத்தார்! என்று சொல்லியுள்ளார். 

அந்த விவரிப்புகள் சீமானின் வார்த்தைகளாய்...

*    2004ம் ஆண்டு மாதவன் நடிப்பில் ‘தம்பி’ படத்தை நான் இயக்கிக் கொண்டிருந்த நேரம். அப்போது இலங்கையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. 

*    அந்நாட்டுக்குள் எளிதாய் யாரும் போய் வரக்கூடிய சூழல் இருந்ததால் அண்ணன் அறிவுமதி, அக்கா தாமரை, இயக்குநர் தங்கர்பச்சான் உள்ளிட்ட பல ஆளுமைகளை ஈழத்துக்கு அழைத்தார்கள் நம் ரத்த உறவுகள்.

*    அப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் அண்ணன் தமிழ்ச்செல்வன் என்னிடம் அழைபேசி வழியாக பேசிவிடுவார். 

*    ஒரு நாள் ‘இங்கே ஒரு முறை நீங்க வாருங்களேன். தலைவர் ரொம்ப விருப்பப்படுறார்’ என்றார் அண்ணன் தமிழ்ச்செலவன். 

*    ஆனால் பொருளாதார சிக்கல்களால் தயாரிப்பாளர்கள் மாறி மாறி மிக சிரமப்பட்டு நான் தம்பி படத்தை எடுத்துக் கொண்டிருந்தேன். 

*    அதனால் தம்பி படத்தை முடிச்சுட்டு வரவா? என்று நான் கேட்டேன். அதற்கு தமிழ்செல்வன் ’ அதற்குள் போர் வந்துவிட்டால் பிறகு நீங்கள் வருவது சிரமமாகிவிடுமே’ என்றார் அண்ணன். நான் உடனே ‘அதனால என்ன...நீங்க ஒரு பக்கம் ஷூட்டிங் எடுங்க, நான் ஒரு பக்கம் ஷூட்டிங் எடுக்கிறேன்.’ என்றேன் அலைபேசியே அதிர்வது போல் பலமாக சிரித்தார் அண்ணன் தமிழ்ச்செல்வன். 

*    ஒரு குழந்தையை போல் பூமுகம் கொண்ட அந்த போராளியை, புதைக்கப்பட்ட இடத்தில்தான் போய்ப் பார்ப்பேன் என நான் அப்போது நினைக்கவில்லை. 
என்று எழுதியுள்ளார். 

இதையும் வெச்சு செய்கின்றனர் சீமானின் அரசியல் எதிரிகள். 

-    விஷ்ணுப்ரியா

click me!