ஆட்சி முடியும்போது அ.தி.மு.க.வின் கதையும் முடிந்துவிடும்: ரகளையாக சாபம் விடுகிறார் ரஜினியின் அவைப்புலவர்

By Asianet TamilFirst Published Nov 15, 2019, 7:08 PM IST
Highlights

ஆக்சுவலா, இந்த லோகத்துல தமிழை உச்சரிப்பு, பிரயோகம், லாவகம், தெளிவுடன் உச்சரிக்கும் மிக குறைவான ஆளுமைகளில் தமிழருவி மணியனும் மிக முக்கியமானவர். அவரு அப்படியே மொழிப்புலமையோடு நின்னிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் தெரியாத்தனமா அரசியலுக்கு வந்து மனுஷன் திக்கு தெரியாம போயிட்டாரு. 

ஆட்சி முடியும்போது அ.தி.மு.க.வின் கதையும் முடிந்துவிடும்:  ரகளையாக சாபம் விடுகிறார் ரஜினியின் அவைப்புலவர்

எப்படி நிகழ்ந்ததோ தெரியவில்லை அந்த மேஜிக்! அது வரமா அல்லது சாபமா? என்றும் தெரியவில்லை. ஆனால் அது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இவ்ளோ பில்ட் - அப் போடு பேசுறோமே அது இன்னான்னு தெரியுமா?....வேற ஒண்ணியும் இல்ல மாமே, தலீவர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய புகழ் பாடும் புலவராக நம்ம தமிழருவி மணியன் அண்ணாத்தே மாறிப்போயி கெடக்குற கதைதான். 

ஆக்சுவலா, இந்த லோகத்துல தமிழை உச்சரிப்பு, பிரயோகம், லாவகம், தெளிவுடன் உச்சரிக்கும் மிக குறைவான ஆளுமைகளில் தமிழருவி மணியனும் மிக முக்கியமானவர். அவரு அப்படியே மொழிப்புலமையோடு நின்னிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் தெரியாத்தனமா அரசியலுக்கு வந்து மனுஷன் திக்கு தெரியாம போயிட்டாரு. 

காங்கிரஸுடன் ஒட்டுதல் காட்டினார், கருணாநிதியை வன்மையாக எதிர்த்தார், வைகோவை முதல்வராக்குவேன்! என்றார், இந்த தமிழகத்துக்கு விஜயகாந்தை விட்டால் வேறு ஆளே கிடையாது! என்றார். அப்படியே சொல்லிக்கினு போனவர் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ‘தவிக்கும் தமிழகத்தைக் கரையேற்ற ரஜினி ஒருவரால்தான் முடியும்!’ என்கிறார். அரசியலுக்குள் வராத ரஜினிக்காக பொதுக்கூட்டம் நடத்துறது, அவது பிரசார பீரங்கியாக மாறி பேட்டி தட்டுவது! என்று தமிழருவி செய்யும் அலும்பல்கள் ஏராளம் ஏராளம். 

அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டி தட்டியிருக்கிறார் பாருங்க....

“எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக விஸ்வரூபமெடுப்பார் ரஜினிகாந்த். மிக மிக அருமையானதொரு கூட்டணியை அமைப்பார். 2021  தேர்தலில் ரஜினிக்கும், ஸ்டாலினுக்கும் இடையில்தான் போட்டி நடக்கும். அந்த மோதலில் ஸ்டாலின் தோற்பார், ரஜினி இந்த தமிழகத்தின் முதல்வராவார். 

இந்த ஆட்சி முடிவதோடு அ.தி.மு.க. எனும் கட்சி காணாமல் போய்விடும். நெல்லிக்காய் மூட்டை நாலாபுறமும் சிதறுவது போல அ.தி.மு.க.வின் தலைவர்கள் திசைக்கொருவராய் தனித்தனி அணியாக சிதறிப்போவார்கள்.” என்று.

தமிழருவியின் இந்த பேச்சைப் பார்த்து ‘க்கும், சாபம் விட்டுட்டாருய்யா தமிழ் புலீவரு!’ என்று கிண்டலடிக்கின்றனர் அ.தி.மு.க.வினர். 

-    விஷ்ணுப்ரியா

click me!