எச். ராஜா மகள் திருமண நிகழ்ச்சியில் அதிரடி காட்டிய தமிழக அமைச்சர்.. எந்த தடையும் இல்லாமல் பணிகள் நடக்கும் என்றார்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 15, 2019, 5:34 PM IST
Highlights

முதலமைச்சரின் முயற்சியால் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு ஒரு மருத்துவமனைக்கு  தலா 1கோடி வீதம் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்திருப்பது வரவேற்கதக்கது விஷயம் என்றவர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளோம். விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்றும் தெரிவித்தார்.
 

1234 கோடி திட்டமான எஸ்ம்ஸ் மருத்துவமனை எங்கும் தடையில்லாமல் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக தேசிய செயலாள H.ராஜா இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதுஇவ்வாறு கூறினார். 

மேலும்,உள்ளாட்சி தேர்தல் எப்பொழுது அறிவிக்கப்பட்டாலும் நாங்கள் அதனை  சந்திக்க தயாராக உள்ளோம் என்றார்,  உள்ளாட்சி தேர்தலிலும் அதனை தொடர்ந்து வர உள்ள சட்டசபை தேர்தலிலும் அதிமுக மகாத்தான வெற்றி பெரும் என்றும் தெரிவித்தார்.முதலமைச்சரின் முயற்சியால் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு ஒரு மருத்துவமனைக்கு  தலா 1கோடி வீதம் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்திருப்பது வரவேற்கதக்கது விஷயம் என்றவர்,  நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளோம். விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்றும் தெரிவித்தார். 

எங்கெல்லாம் விபத்து அதிகம் நடக்கிறதோ, அங்கெல்லாம், உயிரிழப்பை தடுக்க விபத்து காய சிகிச்சை நிலைப்படுத்தும் மையம் உருவாக்கி வருகிறோம் என்ற அமைச்சர், இதன் மூலம் காலம் தாழ்தல் தவிர்க்கப்பட்டு, உடனடி சிகிச்சையால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

click me!