'திமுகவுக்கு பேச்சு மூச்சு இல்ல'..! சரமாரியாக கலாய்த்த அமைச்சர் செல்லூர் ராஜு..!

By Manikandan S R SFirst Published Nov 15, 2019, 4:17 PM IST
Highlights

இவ்வளவு நாட்கள் உள்ளாட்சித்தேர்தல் குறித்து போட்டிபோட்டு பேட்டி கொண்டிருந்த திமுக, தற்போது தேர்தல் அறிவிக்கப்படும் சூழல் நிலவும் நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக அமைச்சர் கூறினார்.

அதிமுக சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள்  விருப்பமனுக்களை 15,16 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று விருப்பமனுக்கள் வழங்கும் நிகழ்வு தொடங்கியது. அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை விருப்பு மனுக்களை விநோயோகிக்கப்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விருப்பமனுக்கள் வழங்கும் நிகழ்வு பெரியார் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு தொண்டர்களுக்கு விருப்ப மனுக்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவை சரமாரியாக விமர்சித்தார்.

இவ்வளவு நாட்கள் உள்ளாட்சித்தேர்தல் குறித்து போட்டிபோட்டு பேட்டி கொண்டிருந்த திமுக, தற்போது தேர்தல் அறிவிக்கப்படும் சூழல் நிலவும் நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக அமைச்சர் கூறினார். அரசை பற்றி தவறாக பேசி குறைகூற திமுக தலைவர் ஸ்டாலின் பல திட்டங்கள் போட்டதாகவும் அது எதுவும் பலிக்காததால் கடுங்கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்ற மு.க.அழகிரியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.

இதையும் படிங்க: ஒரு நாள் தலைமை ஆசிரியை..! அதிரடியாக செயல்பட்டு அசத்திய அரசு பள்ளி மாணவி..!

click me!