இனியும் பொறுக்க முடியாது.. டெல்லிக்கு போய் பேசபோறோம்.. ஓபனாக பேசிய சுகாதாரத்துறை செயலாளர்.

By Ezhilarasan BabuFirst Published Jul 5, 2021, 5:03 PM IST
Highlights

தமிழ்நாட்டில் தடுப்பூசி போட மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட போதிலும், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 

தடுப்பூசி தட்டுபாடு தொடர்பாகவும், சுகாதாரத் துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசுவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தான் உட்பட அதிகாரிகள்  டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் சென்னை சர்.பிட்டி தியாகராய அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை டி.நகர் தொகுதி எம்.எல்.ஏ கருணாநிதி துவக்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும், சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோயம்பேடு காசிமேடு போன்ற பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது, அடுத்தகட்டமாக டி.நகரில் உள்ள 10 ஆயிரம் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான 5 நாட்கள் சிறப்பு முகாம் இன்று துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேவைக்கு ஏற்ப, சிறப்பு முகாம் நீட்டிக்கப்படும் எனவும் கூறினார். தமிழகத்தில் தடுப்பூசி பற்றக்குறை, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட சுகாதாரத்துறையில் சார்ந்த பல்வேறு விசயங்கள் தொடர்பாக  இந்த வார இறுதியில் அமைச்சரும், தானும் டெல்லி சென்று சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போட மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட போதிலும், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.  வரும் 11 ஆம் தேதி தான் 8.5 லட்சம் தடுப்பூசிகள் வரும் என தெரிவித்த அவர், தற்போது தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தால் 11 ஆம் தேதிக்கு முன்பே தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம் எனவும் கூறினார். தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், தொற்று சற்று அதிகரித்து வரும் மாவட்டங்களிலும், தெரு வாரியாக கண்காணிக்கப்படும் என தெரிவித்தார், மக்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 
 

click me!