என் உயிர் உள்ளவரை அதிமுகவை யாராலும் கலைக்க முடியாது.. அதை நான் விடமாட்டேன்.. சசிகலா ஆவேசம்.

Published : Jul 05, 2021, 04:12 PM IST
என் உயிர் உள்ளவரை அதிமுகவை யாராலும் கலைக்க முடியாது.. அதை நான் விடமாட்டேன்.. சசிகலா ஆவேசம்.

சுருக்கம்

எடப்பாடி பழனிச்சாமி மேலும் ஒரு சாதனையை செய்ய முயற்சி செய்து வருகிறார்கள், அது என்னவென்றால் இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சியையும் காணாமல் போக வைக்க வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கிறார்கள் என்றார் மணிவேல், 

என் உயிர் உள்ளவரை அதிமுக கட்சியை யாராலும் கலைக்க முடியாது எனவும், களைக்கவும் நான் விட மாட்டேன் எனவும் சசிகலா தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த யூசுப்,  மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திருமதி. சுமதி, கோவில்பட்டி மாவட்டத்தை சேர்ந்த செண்பகராமன்,வந்தவாசி மனோகரன், திருச்சி. செல்லப்பன், திருவள்ளூர். திருமதி ராஜேஸ்வரி, திருத்தணி. முருகன்,சென்னை சேர்ந்த ஹேமாமாலினி,கோயம்புத்தூர் சேர்ந்த மணிவேல், மற்றும் தஞ்சாவூர் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட தொண்டர்களிடம் சசிகலா இன்று தொலைபேசி வாயிலாக பேசினார். 

கோயம்புத்தூர் மணிவேல் என்பவரிடம் ச சிகலா பேசினார், அப்போது இருவரும் இடையே நடந்த உரையாடன் பின்வருமாறு:  2014ஆம் ஆண்டில் நீங்களும் அம்மா அவர்களும் சேர்ந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற செய்தீர்கள், அதனை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி என மாற்றி விட்டார் எடப்பாடி,  138 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்ததை 65 ஆக மாற்றி சாதனை படுத்தியுள்ளார் எடப்பாடி. 

எடப்பாடி பழனிச்சாமி மேலும் ஒரு சாதனையை செய்ய முயற்சி செய்து வருகிறார்கள், அது என்னவென்றால் இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சியையும் காணாமல் போக வைக்க வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார் மணிவேல், அதற்கு பதில் அளிக்கும் வைகயில் பேசியுள்ள சசிகலாவோ, என் உயிர் உள்ளவரை அந்த வேலையை யாரலையும் செய்ய முடியாது, செய்யவும் நான் விடமாட்டேன். தொண்டர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கும் வரை வெற்றி நமக்கு மட்டும் தான் என உறுதிபட தெரிவித்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?