ஆம்னி பேருந்துகளில் கொள்ளையோ கொள்ளை.. மக்களை தவிக்கவிட்ட போக்குவரத்து துறை.. நோ ஐடியா.? நோ பிளான்.?

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2022, 2:51 PM IST
Highlights

சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளதால் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளை அடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை  என்றும், ஏன் முன் கூட்டியே கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க திட்டமிடவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளதால் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளை அடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை  என்றும், ஏன் முன் கூட்டியே கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க திட்டமிடவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் எச்சரித்துள்ளார். 

அரசு பேருந்துகள் ஓரளவுக்கு இருந்தாலும் கூட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். சில தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக அப்பேருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை பயன்படுத்திக்கொண்டு ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தி பகல் கொள்ளை அடித்து வருகின்றன.  இதனால் பொதுமக்கள் கடும்  அவதிக்கு ஆளாகியுள்ளனர். நாட்டின் 75வது சுதந்திர தினம் திங்கட்கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் விடுமுறையை கழிக்க பலர் சொந்த ஊருக்கு பயணித்து வருகின்றனர். இதை சாக்காக பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளன, இதுபோன்ற விடுமுறை நாட்களில் மட்டும் தான் பேருந்துகளில் அதிக கட்டணம் பெறமுடியும் என்பதால் சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளிப்படையாகவே கூறிவருகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டணத்தை சமாளிக்க முடியாத பலர் கட்டண கொள்ளை குறித்து புகார் கூறி வருகின்றனர்.

தீபாவளி, பொங்கல் நாட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து முன்கூட்டியே பேருந்துகளையும் அதிகளவில் ஏற்பாடு செய்யும் தமிழக அரசு ஏன் இது போன்ற தொடர் விடுமுறை நாட்களை முன்கூட்டியே அறிந்து போக்குவரத்தை ஏற்பாடு செய்ய கூடாது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக மதுரையில் இருந்து நெல்லைக்கு செல்ல வேண்டுமென்றால் 1400 ரூபாய் டிக்கெட் விற்கப்பட்டு வந்தது, ஆனால் தற்போது 4000 ரூபாய் வரை டிக்கெட் விற்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

800 ரூபாய் இருந்தா கட்டணம்  2300 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல 1000 என இருந்த கட்டணம் தற்போது 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த புகார் குறித்து செய்தியாளர்கள் முன்வைத்த கேள்விக்கு பதில் அளித்துள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர், குறிப்பாக தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படும்  ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கூடுதல் கட்டணம் வசூலிக்க பட்டால் மக்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார்  தெரிவிக்கலாம்.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்க இணை போக்குவரத்து ஆணையர், துணை போக்குவரத்து ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். 
 

click me!