
அதிமுகவில் அனைவரும் இணைவதற்கு வாய்ப்புள்ளதாக மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் அனைவருக்கும் கட்சியை காப்பாற்றுவது தான் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் பலத்த போட்டி நடைபெற்று வருகிறது. எடப்பாடி பன்னீர் அணியினர் இரட்டை இலை கண்டிப்பாக எங்களுக்கே கிடைக்கும் என பேட்டி அளித்து வருகின்றனர். ஆனால் டிடிவி தரப்பு எப்படி விசாரணையையும் தீர்ப்பையும் தள்ளிப்போடலாம் ஆலோசித்து வருகின்றனர்.
இதையடுத்து இன்று பேசிய கே.பி.முனுசாமி டிடிவி தினகரன் ஒரு ஏமாற்று பேர்வழி என்றும் அவரை கட்சியில் இணைப்பது போன்ற தம்பிதுரையின் பேச்சு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுகவில் அனைவரும் இணைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் அனைவருக்கும் கட்சியை காப்பாற்றுவது தான் கடமை எனவும் தெரிவித்தார்.
ஒபிஎஸ் தரப்புக்கும் தம்பிதுரையின் பேச்சுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.