
பாகிஸ்தான் தலைவர்களை புகழத்தொடங்கியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி மீண்டும் கட்டித்தழுவிக்கொள்ளலாம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
பிரதமர் மோடியை பாராட்டிவந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது திடீரென பாகிஸ்தான் தலைவர்களை பாராட்டத் தொடங்கியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , பாகிஸ்தான் மற்றும் அதன் தலைவர்களுடனான உறவுகளை வளர்த்துக்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்க –கனடா குடும்பத்தினரை தலிபான் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் நெருக்கமாக இருந்துவந்த டிரம்ப் தற்போது பாகிஸ்தான் தலைவர்கள் பக்கம் சாயத்தொடங்கியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் , இனி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை கட்டித்தழுவிக்கொள்ளலாம் என கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.