கேரளாவிலும் காங்கிரஸ் வெற்றி... பா.ஜ.கட்சி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது!

 
Published : Oct 15, 2017, 08:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
கேரளாவிலும் காங்கிரஸ் வெற்றி... பா.ஜ.கட்சி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது!

சுருக்கம்

Congress win in kerala by election

கேரள மாநிலம், வெங்கரா சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

வெங்கரா சட்டசபைத் தொகுதிக்கு கடந்த புதன்கிழமை இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி சார்பில் பி.பி. பஷீர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் கே.என்.ஏ. காதர் போட்டியிட்டார். மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கே.சி. நசீர், பா.ஜனதா கட்சி சார்பில் கே. ஜனச்சந்திரன் போட்டியிட்டனர். 

தேர்தல் முடிந்த நிலையில் திருரங்காடி, பி.எஸ்.எம்.ஓ. கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்த வாக்கு எந்தர பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டு நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட கே.என்.ஏ. காதர் 65 ஆயிரத்து 227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வேட்பாளர் பஷீரைக் காட்டிலும் 23 ஆயிரத்து 310 வாக்குகளை காதர் கூடுதலாகப் பெற்றார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் பி.பி. பஷீர் 41 ஆயிரத்து 917 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் நசீர் 8 ஆயரித்து 648 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், பா.ஜனதா வேட்பாளர் கே. ஜனச்சந்திரன் 5 ஆயிரத்து 728 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தனர்.

இதன் மூலம் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கைகள், ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி.வரி ஆகியவற்றின் மீதான மக்களின் வெறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமானதாக அமைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், அடுத்த மாதங்களில் நடக்க இருக்கும் குஜராத், இமாச்சலப்பிரதேசம் சட்டசபைத் தேர்தலிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும்.

PREV
click me!

Recommended Stories

எம்ஜிஆர், ஜெ. காலத்தில் இருந்த வரவேற்பு.. TVKவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.. செங்கோட்டையன் ஓபன் டாக்
ஜனவரியில் அதிர்ச்சி..! தவெக மற்றொரு அதிமுகவாக மாறும்..! இனிமேல் அதிமுக கிடையாது..! செங்கோட்டையன் சூளுரை..!